இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பிற்சேர்க்கை 2 எல்லை இல்லா ஆனந்தம் அளித்து, அல்லல் களைந்தே, அருள்வழி காட்டிச் சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி, சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி, அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க் கணுமுற்றி நின்ற கரும்பு உள்ளே காட்டி, வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடும்மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி, அஞ்ச சக்கரத்தின் அரும்பொருள்தன்னை, நெஞ்சக்கரத்தின் நிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்துஎனை ஆண்ட வித்தக விநாயக விரைகழல் சரனே! 33 65