உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்சேர்க்கை 3 34 பிள்ளையார் தோத்திரப் பாடல்கள் l, திருமூலர் அருளியது ஐந்து கரத்தனை, ஆனைமுகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை, ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே. 2. கபிலதேவர் அருளியவை திருவாக்கும்,செய்கருமம் கைகூட்டும்; செஞ்சொல் பெருவாக்கும் பீரும் பெருக்கும் உரு ஆக்கும் ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை. விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து. 3. அதிராவடிகள் அருளியது மொழியின் மறைமுதலே, முன் நயனத்து ஏறே கழிய வரு பொருளே, கண்ணே- தெழிய கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை அல்லாது, ஐயனே, சூழாது என் அன்பு. 4. நம்பியாண்டார் நம்பி அருளியது என்னை நினைந்தடிமை கொண்டு என்இடர் கெடுத்து தன்னை நினையத் தருகின்றான், புன்னை விரசுமகிழ்சோலை வியன் நாரையூர், முக்கண் அரக மகிழ் அத்தி முகத்தான். -