பிற்சேர்க்கை3 * 38 3. ஆனைமுகமும், அரைப்பதும ஆசனமும், பானை வயிறும் படைத்து ஒளிரும் - ஞானத்து நல் உருவாம் தேசி விநாயகனேதாள் பணிந்தே எல்லோரும் வாழ்வோம் பணிந்து. - ஒற்றை மருப்பு உடையான் ஓங்காரப் பேர் உருவான் முற்றாமதி சூடி முக்கண்ணன் சுற்றும் அரவு உடையான் ஐயாறன்; ஆனைமுகன்தானே பரவிடுவோம் நித்தம் பணிந்து. கண்டால் கலிதிரும் கைகுவித்தே மெய் வணங்கில் மண்டும் வினைமுழுதும் மாய்ந்தொழியும் - அண்டம் கருதும் முழு முதலாம் கற்பகத்தை வெற்பார் மருதங் குடி நகர்க்கே வந்து. அம்மை நீ, அப்பன் நீ அன்புநிறை சுற்றம் நீ செம்மைசால் நட்பில் சிறந்தோன் நீ- இம்மைஅருள் செல்வ மொரு கல்வியும் நீ தேசி விநாயகனே! எல்லாமும் நீயே எமக்கு. புத்தி பெற வேண்டுமெனில், புத்திமாற் பத்திமுதல் சத்தி பெற வேண்டுமெனில், சாகாத - முத்திவரைச் சித்தி பெற வேண்டுமெனில் தேசி விநாயகனைப் பத்தி செய வேண்டும் பணிந்து காலனையும் வெல்வோம்; கடுநரகுக்கு ஆட்படோம் மேலை வினை இரண்டும் வேர் அறுப்போம்-ஞானம் இதில் தெள்ளு மருதங்குடி தேசி விநாயகப் பிள்ளையார் தன்னருனைப் பெற்று. காய,மன,வாக்குஅவையால், காண் ஆதி ஐம்பொறியால் ஆயும் மதிதான் அறிந்தோ அல்லாதோ மேயவினை எத்தனையாம் செய்தோம் எமது குல நாயகனே! அத்தனையும் உன் அடிக்கே ஆம்.
பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/53
Appearance