அமரர் கலைமணி தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் தமிழ் கூறும் நல்லுலகுக்கு நன்கு அறிமுகமானவர். அவரது தமிழ்ப்பணியும், கலைப்பணியும் தமிழக வரலாற்றில் புகழ் அத்தியாயங்கள் என்று ஒர் அன்பர் சொன்னார் - முற்றிலும் உண்மை. தஞ்சாவூரில் அவர் உருவாக்கிய கலைக் கூடமும், தமிழ் மக்களுக்கு அவர் விட்டுச் சென்றிருக்கும் நூல்களுமே அதற்குச் சான்றுகளாகும். குற்றால முனிவர்.ரசிகமணி டி.கே.சியின் பிரதம சீடரான அவர் ஆக்கித் தந்துள்ள இலக்கியப் படைப்புகளும், கலைப்படைப்புக்களும் - தமிழுக்கும் a கலையுலகுக்கும் கிடைத்த அரிய பொக்கிஷங்கள். കങ്ങഖഥങ്ങി தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் ஆசிரியரின் பிறநூல்கள் வேங்கடம் முதல் குமரி வரை (நான்கு பாகங்கள்) வேங்கடத்துக்கு அப்பால் கலைஞன் கண்ட கடவுள் கல்லும் சொல்லாதோ கவி தென்னாட்டுக் கோயில்களும் தமிழர் பண்பாடும் அமர காதலர் தென்றல் தந்த கவிதை இந்தியக்கலைச் செல்வம் (வானொலிக் கட்டுரைகள்) மதுரைமீனாட்சி 10. தமிழறிஞர் வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார் 11. ஏசிகமணி டி.கே.சி. 12. ஆறுமுகமான பொருள் 13. வேங்கடம் முதல் குமரி வரை (ஐந்தாம் பாகம் - அச்சில்) 14. ஆடும் பெருமானும், அளந்த நெடுமாலும் (அச்சில்) !
பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/56
Appearance