பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பது மணிகளுக்கு நிகராய் ஒன்பது கோயில்கள் செட்டிநாட்டில் உள்ளன. அவற்றில், பூசை முறை, சிப்பந்திகள் படித்தரம், சட்டதிட்டம் இவற்றில் சிறந்து விளங்குவது, பிள்ளையார்பட்டிக் கோயில். இதனைக் கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல் வண்ணமுறக் காத்துவரும் பிள்ளையார்பட்டிக் கோவில் நகரத்தார்க்கு என் நன்றியும் வணக்கமும் உரியதாகும். சென்ற ஆண்டு எங்கள் குடும்பத்தார்க்கு இக்கோவில் பணிகளை மேற்பார்க்கும் நற்பேறு வாய்த்தது குறித்துப் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். துங்கக் கரிமுகத்துத் தூமணி”யைப்பற்றி எழுதவேண்டும் என்று திரு.தொண்டைமான் அவர்களைக் கேட்டுக்கொண்டேன். அவர்களும் உடனே இசைந்து ஒரு வாரத்திற்குள் இந்நூலை உருவாக்கி அளித்தார்கள் பிள்ளையார்பால் அவர்கள் கொண்டுள்ள பக்தியும் பற்றுமே இதற்குக் காரணம். அவர்களுக்கு என் நன்றி உரியதாகும். அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், மக்கட் பேற்றையும் மற்றும் சகல செல்வத்தையும் அருள கற்பக விநாயகரைப் பிராரத்திக்கின்றேன். இப்பிள்ளையாரை வழிபட்டார் நாடிய பொருள் கைகூடும், ஞானமும் புகழும் உண்டாம் என்பது என் கருத்து. பக்திநெறி தலைப்பட்டோர்க்கு இச்சிறு நூல் பயனளித்தல் உறுதி. சமய உலகம் இந்நூலுக்கு வரவேற்பளித்து வாழ்த்தும் என நம்புகிறேன். கோவை 8,9.56. பழ.கண்ணப்ப செட்டியார்