பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


2
ஓடிப்போன ராஜா

பள்ளிக்கூடத்தின் ஆரம்ப மணியடித்துங் கூடப் பைத்தியம் பிடித்தவனைப் போல், சுவரில் ஒட்டியிருந்த விளம்பரத்தையே வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தான் ராஜா. குறைந்தபட்சம் ஒரு ரூபாய்க்கு அந்தக் கம்பெனியார் அளிக்கும் ஒரு லட்சம் ரூபாய்ப் பரிசை எண்ணிக்கூட அவன் மனம் வியக்கவில்லை. அதைவிடப் போட்டியில் கடைசிப் பரிசை அடைபவருக்குக்கூட, 'கைலாசம் காம்படிஷன்ஸ்' கம்பெனியார் இனமாக அளிக்கப்போகும் விலை உயர்ந்த பேனாவை நினைக்கும் போதுதான் ராஜாவின் பிஞ்சு உள்ளத்தில் ஆசைத்தீ கொழுந்துவிட்டெரிந்தது.

வறுமையால் வாடும் ஏழைக் குமாஸ்தாவிற்கு மகனாய்ப் பிறந்த அவனால் பெயரளவில்தான் ராஜாவாக இருக்க முடிந்ததே தவிர, அவன் வாழ்வைச் சுற்றிலும் ஏழைமைதான் இரும்புவேலி இட்டு ஆட்சி செய்து