பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

நிறத்திலும் தங்க நிறத்திலுமாகத் தன் சகமாணவர்கள் அழகாகப் பைகளில் செருகிக்கொண்டிருக்கும் பேனாக்கள் தன் ஏழைமையைக் கண்டு பரிகசிப்பனபோல் இருந்தது அவனுக்கு. தளும்பிக்கொண்டிருந்த கண்ணிர் அவனது பார்வைக்குத் திரை போட்டுத் தடுத்தது.

மெளனமாக வீட்டை யடைந்த ராஜா, ஒருவரிடமும் பேசாமல் அறையில்வந்து படுத்துவிட்டான். துள்ளித்திரிய வேண்டிய இளம் உடம்பில் சோர்வு குடி புகுந்து விட்டது. உள்ளத்திலே உற்சாகம் இல்லை. அது முகத்திலும் பிரதிபலித்தது. இந்தக் கவலைக்குக் காரணம் கேட்ட பிரேமாவைக் கசப்புடன் நோக்கினன். அவள் பதில் ஏதும் கூறாமல், கொண்டு வந்த காபியை ராஜாவின் எதிரில் வைத்துவிட்டுத் தன் தாயாரிடம் சென்று, முகத்தைத் தூக்கிக்கொண்டிருக்கும் ராஜாவைப்பற்றிக் கூறிக்கொண்டிருந்தாள்.

அப்பொழுதுதான் வெளியில் ஒடியாடி விளையாடிவிட்டுத் துள்ளிக்கொண்டே, தன் அண்ணன் அருகில் வந்த ரவி, சில்லிட்டுப் போயிருந்த ராஜாவின் காபியைச் சரிவரக் கவனிக்காமல் காலால் தட்டிவிட்டான். உள்ளே எதற்காகவோ வந்தவன், மறுகணம் அங்கே நிற்கவே இல்லை. கையில் அகப்பட்டால், ராஜா என்ன செய்வான் என்பது அவனுக்கா தெரியாது? தன் முதுகைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டி மின்னல் வேகத்தில் அந்த அறையினின்றும் ஒடி மறைந்துவிட்டான் ரவி.

வெறுப்புடன் தன் இடத்தை விட்டெழுந்த ராஜாவின் பார்வை, தற்செயலாய் எதிரிலிருந்த தன் தந்தையின் கோட்டின் மீது விழுந்தது. ஏதோ ஒருவித உணர்வு அவனை உந்தித்தள்ளியது. மின்சாரத்தினால் இயக்கப்பட்டவன் போல் கோட்டுப் பைகளில் ஒவ்வொன்றாகத் தன் கைகளை விட்டுத் துழாவினான். கடைசியில் கோட்டின் உள் பையில் இருந்த நான்கு ஒற்றை ருபாய்