பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

பட்டணத்தை அடைந்தான் ராஜா. ஆனால், அங்கே அடியெடுத்து வைத்ததுமே, அதிர்ஷ்ட தேவதை அவனை வாரியணைத்துக் கொண்டுவிட்டாள். பல நாள் பட்டினியும் சில நாள் அரைவயிற்றுக்குமாக, வேளைக்கு ஓர் இடமாய் அலைந்து, சோர்வடைந்து போயிருந்த அவன் செவிகளில், ஒரு விளம்பர மோட்டாரிலிருந்து ஒலி பெருக்கி வந்த ஓசை பளிச்சென்று கேட்டது.

"கைலாசம் காம்ப்டிஷன் கம்பெனியாரின் புத்தாண்டு பரிசுப் போட்டியின் முடிவு இன்று வெளியாகிவிட்டது. முதல் பரிசு ரூபாய் ஒரு லட்சத்தயும் அடையப் போகும் அதிர்ஷ்டசாலி, '1330-ஆம் நம்பருக்கு உடையவர்". விளம்பர் லாரி மெதுவாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தது.

ராஜா பரபரப்புடன் தன் டிராயர் பைக்குள் கையை விட்டுக் கசங்கிப் போயிருந்த சிறிய கடிதத் துண்டை எல்லைமீறிய ஆவலுடன் பிரித்துப் பார்த்தான். அவ்வளவுதான்! அடுத்த நிமிஷமே, தாங்க முடியாத சந்தோஷத்துடன் அந்த விளம்பர வண்டியை நோக்கி ஓடினான்.

அவனது வரலாற்றைக் கேட்டு மனமிரங்கிய அந்த அதிகாரி ராஜாவை உற்சாகப்ப்டுத்தினார். போட்டியிலே முதலாவதாக வெற்றி பெற்ற அவனுடைய அதிர்ஷ்டத்தைப் புகழ்ந்தார். நேராக அவனையும் அழத்துக் கொண்டு காரியாலயத்திற்குச் சென்றார்.

திடீரென்று தன் வீட்டு வாசலில் அழகிய நீல நிறக் கார் ஒன்று வந்து நிற்கவுமே, உள்ளே இருந்த ரவியும் பிரேமாவும் ஓடோடியும் வெளியில் வந்து நின்றனர். அவர்களைத் தொட்ர்ந்து ராஜாவின் தந்தையும் வந்தார். ஆனால், அடுத்த கணம் புத்தம் புதிய, பளபளப்பான் சில்க் நிஜார், சொக்காய்-இவைகளை அணிந்த வண்ணம் காரி