பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




3.
சிதம்பர ரகசியம்

'சாந்தி நிவாஸம்' தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. தலைத் தீபாவளிக்கு வரவேண்டிய மாப்பிள்ளைகளுக்காகவும் தலைத்தீபாவளிக்குச் செல்ல வேண்டிய பிள்ளைகளுக்காகவும் வீட்டில் காரியங்கள் தடபுடலாக நடந்துகொண்டிருந்தன.

அதையும் தவிர சாந்தி நிவாஸம் எப்போதுமே கலகலப்பாகத்தான் இருக்கும். பெயருக்கு ஏற்றபடி இருக்காது. காரணம்: அந்தப் பங்களாவில் நிரந்தர உறுப்பினர்களாக (கைக்குழந்தைகளைத் தவிர) சுமார் இருபத்தெட்டுப் பேர்களுக்கு மேல் இருப்பார்கள்.

ராவ்பகதுர் புருஷோத்தமனும் ஸ்ரீமதி புருஷோத்தமனுந்தான் சாந்தி நிவாஸின் அதிபதிகள். அதன் பிறகுதான் அந்தக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் பெண்களும் பிள்ளைகளும்; மாப்பிள்ளை, மருமக்களும், பேரன்