பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

விசாரிப்பதில்லை. ஏனென்றால், அது சுற்றிச் சுற்றி அவரது குடும்பத்தையேதான் பாதிக்கும்.

ஆனால், சிதம்பரத்தைக் கண்டதும் அவரால் அப்படித் தாண்டிப் போக முடியவில்லை. மிகவும் நல்ல பையன். புருஷோத்தமன் அவன் அருகில் சென்று, "பாட்டி சாப்பிடக் கூப்பிடுகிறாளே, போகவில்லையா சிதம்பரம்?" என்று அன்புடன் கேட்டார்.

சிதம்பரம் ஏதோ யோசனையிலிருந்து, "அதிருக்கட்டும் தாத்தா, எனக்குத் தீபாவளி டிரஸ்ஸெல்லாம் எப்போது வாங்கித் தரப்போகிறீர்கள்?" என்றான்.

இதைக் கேட்டதும், அசடு, இதற்காகவா இப்படிச் சாப்பிடப் போகாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறான்' என்று மனத்திற்குள் எண்ணிக்கொண்ட வண்ணம், "சிதம்பரம், உனக்கு மட்டும் என்ன; நாளைக்கு விட்டில் எல்லோருக்குமே துணிமணிகள் வந்துவிடும் — ராதாகிருஷ்ணன் போகப் போகிறான்" என்றார்.

"உங்களை ஒன்று கேட்பேன்; ஒப்புக்கொள்வீர்களா?" என்றான்.

அவர் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந் தார்.

"எனக்கு வேண்டிய டிரஸை நானே நேரில் போய் என் இஷ்டம்போல் வாங்கிக்கொள்கிறேன். அந்த ருபாயை என் கையில் கொடுப்பீர்களா?" என்று கேட் டான் சிதம்பரம்.

புருஷோத்தமன் ஒரு சிரிப்புச் சிரித்து, "அசடு, இதற்காகவா இத்தனை கோபம், இத்தனை பீடிகை? யார் வாங்கினல் என்ன? என்ன வேண்டுமோ, என்னைக் கேள், நான் தருகிறேன்! போய் வாங்கிக்கொள்! இப்போது