பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

சாப்பிட வா" என்று அழைத்தார். சிதம்பரமும் நிறைந்த மனத்துடன் பின் தொடர்ந்தான்.

மறுநாளே புருஷோத்தமன் சிதம்பரத்தின் டிரஸ்ஸுக்காக ஒதுக்கியிருந்த ஐம்பது ரூபாயை அவனிடம் கொடுத்துவிட்டார். அவர் சொன்னபடி, சிதம்பரம் நீங்கலாக, அத்தனை சிறுவர்களுக்கான துணிமணிகளையும் பெரியவர்களுக்கான ஜவுளியையும் வாங்கிக்கொண்டு ராதாகிருஷ்ணன் வந்து சேர்ந்தான். ரூபாயை வாங்கிக் கொண்டுபோன சிதம்பரம் மட்டும், டிரஸ் வாங்கி வராத தோடு அடுத்தநாள் தன் தாத்தாவிடம் வந்து, "இன்னும் ஒரு நூறு ரூபாய் கடனாகத் தருகிறீர்களா? அடுத்த வருஷம்வரை எனக்கு நீங்கள் பாக்கெட் மணியே தர வேண்டாம்-கழித்துவிடுகிறேன்."

புருஷோத்தமன் மனத்திற்குள்ளேயே சிரித்த வண்ணம் யோசனையில் ஆழ்ந்தார்.

சிதம்பரம் பொறுப்புள்ள பையன்தான்; அவனிடம் மற்றவரை விட ஏதோ ஒருவிதக் கவர்ச்சி அவருக்கு உண்டு. என்றாலும் அவ்வளவு அதிகமான தொகையை அவனிடம் கொடுக்கலாமா? மேலும் இவனுக்கு மட்டும் நூற்றைம்பது ரூபாய்க்கு ஜவுளி வாங்கினால் மற்றக் குழந்தைகள் நேரடித் தாக்குதல்களிலேயே இறங்கிவிட்டால் என்ன செய்வது? சட்டென்று அவருக்கு ஏதோ தோன்றியது. அவன் கேட்ட தொகையைக் கையில் கொடுத்துவிட்டார்.

ன்றுதான் தீபாவளி. எல்லோரும் கங்காஸ்நானம் செய்தாகிவிட்டது. எல்லோரும் புத்தாடை உடுத்திக்கொண்டும் விட்டனர்.

பலகாரம் சாப்பிடும்போதுதான் சிதம்பரத்தின் உடையைப் புருஷோத்தமன் பார்த்தார்; அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. பட்டும் சில்க்கும். டெரிலி