பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

ஆசையோடு தாவி எடுத்த மிட்டாயைப் பிஞ்சுக் கரங்களிலிருந்து பிடுங்கிப் பந்துபோல் குழந்தையை எறிந்துவிட்டு வந்தானே. அந்தச் சாபந்தானே!

அப்படியானால் ஊர்க்குழந்தைகளிடமெல்லாம் சிரிக்கச் சிரிக்கக் குழைவாகப் பேசிக் கன்னத்தைத் தடவி முத்தமிடுவதெல்லாம்?

எல்லாம் வெறும் பிழைப்புக்காக ஆடுகிற போலி நாடகம். இல்லாவிட்டால் அத்தனை குழந்தைகளும், எத்தனையோ கடைகளை விட்டு அவன் தட்டைச் சுற்றிக் கொண்டு நிற்குமா?

வீட்டை அடைந்ததும், "நயினா!” என்று ஓடிவந்த சின்னப்பயல், பாவாடையின் கால்களே வந்து கட்டிக் கொண்டான்.

துளிர்த்து நின்ற கண்ணிரைச் சுண்டி எறிந்து விட்டுப் பாவாடை பயலைத் தாவி அணைத்துக் கொண்டான். எவ்வளவு இருந்தாலும், தட்டில் அவனுக்காக ஒரு மிட்டாய் வைத்திருக்காமல் பாவாடை வியாபாரம் செய்யவே மாட்டான். இன்று....?

"என்ன? அப்படியே புள்ளெயெத் தூக்கிக்கிட்டு மலைச்சுப்போய் நிக்கிறே? வியாபாரம் படா ஜோருதான் போலிருக்குதே! தட்டில் ஒன்றுகூடக் காணோமே!"

மகிழ்ச்சி கொப்புளிக்கும் மாரியம்மாளின் பேச்சு பாவாடையின் இதயத்திலே சம்மட்டி கொண்டு அடிப்பது போல் மிகுந்த வேதனையை அளித்தது. நடந்த விஷய மனத்தையும் விளக்கி, 'ஓ' வென்று வாய் விட்டுக் கதறி விட்டான் பாவாடை.

"போனப் போவுது போ, கிடக்கு! அதுக்காக இப்படியா ஒரே முட்டா இடிஞ்சுப் போயுடுவாங்க?"