பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

நிற வெல்வெட்டில் தைத்த கான்வகேஷன் உடை ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. சுற்றிலும் உள்ள சுவர்களில், பெரிய அளவில் என்லார்ஜ் செய்யப்பட்ட வண்ண வண்ண ஒவியங்கள்.

அனைத்தும் சேகரின் முகச்சாயலே---

முதல் படத்தில் சேகர் பட்டதாரிக் கறுப்பு உடையில் கம்பீரமாகக் கையில் சர்ட்டிபிகேட்டுடன் நிற்கிறான்.


அடுத்ததில் ஒரு டாக்டராக; அதற்கடுத்ததில் ஒர் எஞ்சினியராக; மற்றொன்றில் ஒரு பெரிய கம்பெனி டைரெக்டராக; பெரிய வக்கீலாக; இப்படிப் பல தோற்றங்கள் - விதவிதமான படங்கள்.

"இவையெல்லாம் என்ன அப்பா? - ஆச்சரியத்தை அடக்க முடியாமல் கேட்ட சேகருக்குக் கார்த்திகேயன் அமைதியாக ஒரே வார்த்தையில் பதில் அளித்தார்:: "கனவு".

'இதுதான் என் கனவு. இதுபோல், நீ கல்லூரிப் படிப்புப் பட்டதாரியாக வேண்டும். அந்தக் காட்சியைக் கண்ட பிறகுதான் என் மனம் குளிரும்.

படித்துப்பட்டம் பெற்ற பிறகு, இவற்றுள் உனக்கு விருப்பமான எந்தத் துறையில் வேண்டுமானாலும் ஈடுபடலாம். ஆனால் நான் உயிரோடு இருக்குபோதே. . . . நீ பட்டதாரியாகிவிடுவதைப் பார்த்துவிட வேண்டும்.

கண்களில் நீர் மல்க, சிறு குழந்தையானார் கார்த்திகேயன்.

சேகருக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. 'அப்படியே செய்கிறேன், அப்பா' என்று வணங்கினான்.

மகனே அப்படியே வாரித் தழுவிக்கொண்டு உச்சி மோந்தார் கார்த்திகேயன்.