பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

அதாவது, அவரது தர்ம பத்தினியைத் தவிர, அதிக ஏற்றத்தாழ்வான வயதுகளுக்கு இடையே வந்து அவதரித்த நான்கு குழந்தைகள்-வாழ்ந்து வந்தன.

ஐம்பத்து ஆறாவது வயதை அணுகிக்கொண்டிருக்கும் சர்மா அபாரமான தெய்வ பக்தி கொண்டவர்; பூஜை செய்ய ஒரு நாள்கூடத் தவறமாட்டார்; காலையிலும் மாலையிலும் சிவதரிசனம் செய்யாமல் நீர் அருந்துவதுகூடக் கிடையாது. அவருக்கு வாய்த்த மனைவியோ சர்மா அவர்களுக்கு நல்ல தசாபுக்திகள் நடந்து வந்த காலத்தில் கிடைத்த ஒரு பொக்கிஷம்தான் இந்தப் பத்தினித் தெய்வம். 'இல்லை' என்று தன் கணவர் அறிய அவள் குறை ஏதும் வைட்பதில்லை.

தானும் குழந்தைகளும் துளசி ஜலத்துடன் இருக்க நேர்ந்தபோதும்கூட, மனைவியால் உபசரிக்கப்பட்டு வயிறார உண்டுவந்த சர்மாவுக்கு வீட்டின் சூழ்நிலையே தெரியாமல் இருந்து வந்தது ஆச்சரியம் இல்லை அல்லவா? ஆனல், ஒரு நாள் அதை அவரும் உணரும் சந்தர்ப்பம் ஒன்று எப்படியோ ஏற்பட்டுவிட்டது!

சர்மா துடிதுடித்துப் போனார். 'இப்படி எத்தனை நாள்கள் என் பொருட்டுத் தாயும் குழந்தைகளும் பட்டினி கிடந்திருப்பார்களோ! என்று எண்ணிப் பார்க்கக்கூட அவர் மனம் தாளவில்லை. தம்மையும் மீறி 'ஹோ' வென்று அழுதுவிட்டார். அவரது அந்த வேதனைக் கண்ணிர் வெண்ணீறணிந்த கைலைநாதனது மேனியைக் கொதிநீராகப் பட்டுப் பொசுக்கியிருக்க வேண்டும். இனித் தாமதித்தால், தம் பக்துன் உயிர் - வாடிப்போகும் என்பதை உணர்ந்தார் பரமன்.

ஆனால், பரமனுக்கு சர்மாவைப் போலவே, நாள் தவறாமல், இருமுறை கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு, ஆயிரமாயிரம் விண்ணப்பங்களை வாரி