பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

ஆனால், என்ன துரதிர்ஷ்டம்! பிரின்ஸிபால் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம், பாதிரியாரே வந்து சேர்ந்துவிட்டார்.

பிள்ளையவர்களின் பாடு தர்மசங்கடமாகிவிட்டது.

"இப்போதுதானே பிரின்ஸிபால் உங்களைத் தேடிக் காரில் போகிறார். வழியில் பார்க்கவில்லையா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

பாதிரியார் வருத்தத்துடன், "அடடா, நான் பார்க்கவில்லையே. சரி; அதனால் என்ன, வந்தால் நான் சொல்லிக்கொள்கிறேன். அவருக்காக வேறு தாமதமாக்க வேண்டாம். விழாவை ஆரம்பிக்கலாம்" என்றார்.

கார்த்திகேயன் பிள்ளை, பாதிரியாருக்கும், பிரின்ஸிபாலிடம் கூறிய முன் பதிலையே திரும்பக் கூறினார்.

வேறு வழியின்றி பிரின்ஸிபாலைத் தேடிப் பாதிரியார் வெளியே போனார். சற்றைக்கெல்லாம் பிரின்ஸ்பால் வந்துவிட்டார். பாதிரியாரைக் காணோம்

விருந்திற்கு வந்திருந்த சேகரின் மாணவ நண்பர்கள் பொறுமையை இழந்தார்கள். எல்லாருடைய வயிற்றையும் பசி கிள்ளியது.

"இது என்னடா இது? பிரின்ஸ்பாலைத் தேடிப் பாதிரியார் போவதும், இவரைத் தேடி அவர் போவதும் அவரைத் தேடி இவர் போவதும் - இன்று நாம் விருந்து சாப்பிட்டாற் போலத்தான்" என்று அலுத்துக்கொண்டார்கள்.

இதைக் கவனித்த பிரின்ஸ்பால் சட்டென்று எல்லோருக்கும் மத்தியில் நின்று கூறினார் :