பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

லவா மற்றவர்களுடைய பணி சிறக்கும்? குழந்தையுடன் துணைக்கு வந்த கலாவின் பாட்டியை டைரக்டர் ஒரு முறை அலுப்புடன் திரும்பிப் பார்த்தார். அந்தப் பார்வையின் வேகம் தாளாமல் பாட்டி பத்மாஸனி அம்மாள் டைரக்டரைச் சிறிது சாந்தப்படுத்த முயன்றார்.

"டைரக்டர் சார், கலா இந்த மாதிரி இதுவரை அடம் பண்ணினதே கிடையாது. இதுவரை எத்தனை படங்களில் நடித்து வெளுத்து வாங்கியிருக்கிறாள்! இன்று அவளுக்கு 'மூட்' இல்லையோ என்னவோ தெரியவில்லை. இன்னும் ஒருமுறை 'டிரை' பண்ணுங்கள், இல்லாவிட்டால் கலா எப்படியும் நாளைக்கு நன்றாக நடித்துவிடுவாள்" என்று கூறினாள்.

இதைக் கேட்டதும் டைரக்டருக்குக் கொஞ்சம் நஞ்சம் தணிந்திருந்த கோபமும் கிளறியெழுந்தது. ஆயினும் அவர் தம்முடைய நீண்ட காலத் தொழில் துறை அனுபவத்தினாலும், இயற்கையான பொறுமையினாலும் அதை அடக்கிக் கொண்டார்.

"குழந்தைக்கு 'மூட்' வர வேண்டுமாக்கும்! அதை எதிர்பார்த்து அத்தனை காரியங்களும் காத்திருக்கவேண்டும்; அவசியமானால் ஷூட்டிங்கையே ஒத்தி வைக்க வேண்டும் அல்லவா? ஹூம்...இன்னும் ஒரு முறை பார்க்கிறேன். ஒத்து வராவிட்டால் கலாவையே கான்சல் செய்துவிடுகிறேன்!" என்று ஒரு முடிவிற்கு வந்தார்.

டைரக்டர் சம்பூர்ணம் தமிழில் பல வெற்றிப்படங்களைத் தயாரித்து வெளியிட்டு ஏராளப் புகழும் பொருளும் ஈட்டியவர். உணர்ச்சி கொந்தளிக்கும் கட்டங்கள் அவரது படத்தில் சிறந்து விளங்கும். காட்சிகளை அப்படியே தத்ரூபமாக எடுக்க வேண்டும்; அமைய வேண்