பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

டும் என்பதில் பிடிவாதமும், அதிக அக்கறையும் காட்டுபவர்.

இப்போது, அவர் ‘தமது எட்டாவது குழந்தை' என்னும் படத்திற்காகவே, சில வெளிப்புறக் காட்சிகளுக்கென அந்த வளமான கிராமத்தைத் தேர்ந்தெடுத்தார்.

பேபி கலாவுக்குத்தான் எட்டாவது குழந்தையான கண்ணன் வேடம். ஆயர்பாடியில் ஆயர் குல மங்கையர்கள், தலையில் தயிர்க்குடத்துடன் வியாபாரத்திற்காக அருகிலுள்ள கிராமங்களுக்குப் புறப்படுகிறார்கள். மரங்கள் நிறைந்த பாதை வழியாக அவர்கள் சென்று கொண்டிருக்கும்போது, கண்ணன் மறைந்து இருந்து கற்களை அவர்கள் தயிர்க்குடத்தின் மீது வீசுகின்றான். பானை பொத்துக்கொண்டு தயிர் ஒழுகி, அவர்களை அபிஷேகம் செய்கிறது. கண்ணன் அதைப் பார்த்துவிட்டு எதிரில் வந்து கை கொட்டிச் சிரிக்கிறான். பிறகு, அவர்களை ஏமாற்றி ஓடுகிறான். இப்படி ஆரம்பிக்கிறது காட்சி.

இந்தக் காட்சிக்காகத்தான் கலாவுடன் டைரக்டர் சம்பூர்ணம் படாத பாடு பட்டார். ஆயர் குல மங்கையரும் மற்றவர்களும் சோர்ந்து போய்விட்டனர். ஒவ்வொரு முறையும், டைரக்டர் "ரெடி" என்று கூறி, அவர்கள் நடிக்க ஆரம்பித்ததும், கண்ணன் வேஷத்திலிருந்த கலா, கதைக்குச் சம்பந்தமில்லாத குறும்புகளிலே ஈடுபட்டிருந்தாள்; அத்துடன் டைரக்டரோ அவளது பாட்டியோ சொல்லிக் கொடுப்பதைக்கூட லட்சியம் செய்யவில்லை.

சம்பூர்ணம் மீண்டும் தம்மை உற்சாகப்படுத்திக் கொண்டு எழுந்தார். இறுதியாக ஒரு முறை பார்த்துவிடுவது என்று 'டேக்' கிற்கு எல்லோரையும்