பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

தயார் செய்துவிட்டார். ஆயர் குல மங்கையர்கள் ஒத்திகைப்படி ஒயிலாகக் காட்டுப்பாதையில் சுவாரஸ்யமாக சம்பாஷித்தவண்ணம் சென்றுகொண்டிருந்தனர். ஆனால், அப்போது மரத்தின் மறைவிலிருந்து பானைமீது கல்லெறிய வேண்டிய கண்ணனோ...?

கலா பழைய சண்டித்தனத்தையே தொடர்ந்து செய்தாள்; அழுதாள்; அடம் பிடித்தாள். டைரக்டர் அதட்டினார். அவ்வளவுதான்——

கையிலிருந்த கல்லைப் பாட்டிமீது வீசி எறிந்து விட்டு ஓட்டம் பிடித்துவிட்டாள்.

டைரக்டர் பொறுமையை இழந்தார். சிப்பந்திகள் கண்ணனைத் துரத்திக்கொண்டு ஓடினர். கலாவோ அவர்கள் கையில் அகப்படாமல் வளைந்தும் திரும்பியும் அவர்களுக்குப் போக்கு காட்டியபடியே அந்தக் கிராமமெல்லாம் ஓடிக்கொண்டிருந்தாள். ஆனால், துரத்திச் சென்றவர்கள் விடுவார்களா?

குறுக்கு வழியில் புகுந்து, எங்கோ பராக்குப் பார்த்துக்கொண்டு தெருமுனையில் நின்ற கண்ணனை 'லபக்' கென்று பிடித்துக் குண்டுக்கட்டாய்க் கொண்டுவந்து விட்டார்கள்.

ஆத்திரத்தோடு பேத்தியை அறைய வேண்டும் என்று கையை ஓங்கிக்கொண்டு வந்த பாட்டி பத்மாசனி அம்மாளை டைரக்டர் தடுத்து, "நீங்கள் அவள் கண்ணிலேயே படக்கூடாது. எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இன்று அவளை நான் விடுவதாக இல்லை." என்று அனுப்பிவிட்டார்.

பிறகு, குழந்தை கண்ணன் அருகில் சிரித்தபடியே வந்து நின்றார். சட்டென டைரக்டர் தம் ‘பாண்' டினுள்