பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

"இப்படியே குழந்தை சீன் முழுவதும் நடித்து முடித்துவிட்டால், எவ்வளவு நன்றாயிருக்கும்?"

எண்ணங்கள் இதயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் போதே சட்டென்று பத்மாசனி அம்மாள் கூறிய 'மூட்' ஞாபகத்திற்கு வந்தது. மறு கணம் டைரக்டர் பரபரப்புடன் விசிலை ஊதினார்.

'ஷாட்' ஆரம்பமாயிற்று.

ஆயர்குல மங்கையர்கள் தலையில் குடத்துடன், வசனம் பேசியபடி ஒய்யார நடை போட்டுக் சென்று கொண்டிருந்தனர்.

மெல்லிய பின்னணி இழையோடிக்கொண்டிருந்ததது.

மறு கணம்? “டொக்......டொக்....."

தயாராகவே காத்திருந்த கண்ணன், கையிலிருந்த கற்களை வீசி நிறுத்தினான். விளைவு...?

பானைகளில் பொத்தல். ஆயர் குல மங்கையருக்குத் தயிர் அபிஷேகம்.

இது கண்ணனின் வேலைதான் என்று அவர்களுக்குப் புரிந்தது. அதை அவர்களது முக பாவம் காட்டியது.. ஆத்திரத்துடன் பானைகளைக் கீழே இறக்கி வைத்தனர். ஆளுக்கொரு மூலையாய்த் தேடுகையில் எதிரில் வந்து இதோ, இங்கே என்று கூறினான். எட்டிப் பிடிக்குமுன் கைகொட்டிச் சிரித்து ஓடிய மாயவனைத் தேடும் பணியில் முனைந்தனர். ஆனால், தேவகி மைந்தனா அவர்கள் பிடியியில் சிக்குபவன்? எல்லோரையும் ஏமாற்றிவிட்டுத் வந்து பானைகள் அருகில் வந்தான். முழங்கை வரை