பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

"சுஜாதா, சுகந்தி, பிரியமாலா" என ஒவ்வொருவர் பெயரையும் செல்லமாக அழைத்துத் தன்னை விட்டு விடும்படி வேண்டினான். 'அம்மாவிடம் அழைத்துப் போனால் கொன்றுவிடுவாள்' என்று கூறிக் கெஞ்சினான்.

"இந்தத் தடவை நீ எத்தனை அழுது புரண்டாலும் நடவாது. உன்னை இந்தக் கோலத்தோடு கொண்டு போய்க் காட்டினால் தான் உன் அம்மா நம்புவாள்" என்று எல்லோருமாகச் சேர்ந்து பிடிவாதமாக இழுத்துச் சென்றனர்.

'ஓகோ....அப்படியா...' என்று எண்ணிய கண்ணன், சட்டென்று இடையிலிருந்த புல்லாங்குழலை எடுத்து இதழில் பொருத்தினான்.

மறுகணம்...?

குழலோசை தேவகானமாக ஒலித்தது. மரம், செடி, கொடி ஆநிரைகளே அந்த இன்னிசையில் செயலிழந்தன வென்றால் ஆயர்குல மங்கையர்கள் மயங்குவதா அதிசயம்? அனைவரும் அந்த இனிய நாதத்தில் மெய்மமறந்து சிலைகள் போல் நின்றுவிட்டனர். மெல்லப் பிடி நழுவியது.

மறுகணம்.......?

கண்ணன், கை நழுவிச் சென்றுவிட்டான். வேணு கானம் மட்டும் எங்கிருந்தோ அவர்கள் செவிகளில் இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தது. ஏமாந்தது அறியாமல் ரசித்துக்கொண்டிருந்தனர், ஆயர் குல மங்கையர்.

"கட்....கட்...." என்று டைரக்டர், மகிழ்ச்சி பொங்க உரக்கக் கத்தினார் 'டேக்' பிரமாதமாக அமைந்துவிட்டது.