பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


பிள்ளையார் சிரித்தார்.pdf
7
பொன் வாத்து

மேனகா மில்ஸ் அதிபரான பசுபதியின் முன்னால் அவரது ஆலையில் பணிபுரியும் அத்தனை ஊழியர்களும் கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருந்தனர். பசுபதி அவர்களையெல்லாம், மொத்தமாகவும் தனித்தனியாகவும் விசாரித்தார். திரும்பத் திரும்ப அதே கேள்விகளைக் குணமாகவும் கோபமாகவும் கேட்டார்.

"இப்பொழுது எதற்காக இந்த வேலை நிறுத்தம்? வாசு உங்களிடம் என்ன சொன்னான் ? இதுவரை உங்களுடைய நியாயமான எத்தனை கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். எதற்கும் ஒர் அளவு உண்டில்லையா? பொன் முட்டை இடுகிறதென்றால், வயிற்றையே கிழித்து விடுவதா? இப்பொழுதாவது சொல்லுங்கள், வாசு உங்களிடம் என்ன சொன்னான்? எதைச் சொல்லி உங்கள் மனத்தைக் குலைத்துவிட்டு ஊருக்கு ஒடிப் போயிருக்கிறான், சொல்லுங்கள்."