பக்கம்:பிள்ளை வரம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பிள்?ன வரம் இந்தச் சொற்களை அவன் உலகுக்கே பறை சாற்றுபவன்போல் உரத்துக் கூறினன். "தெய்வம்! இதோ இதை வந்து பார்." மகிழ்ச்சி பொங்கும் இந்தக் குரலைக் கேட்டுப் பல தாட்கள் ஆகிவிட்டன: தெய்வயானை ஒடி வந்தாள். அவன் கேட்கிருன்: "அன்று இப்படித்தானே இருநதாய' . "அதென்னவோ உங்களுக்குத்தானே நன்ருகத் தெரியும்?” சிறிது நேரம் இருவரும் மெளனமாக ஒவியத் தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். "இப்பொழுது இதை எதற்காக வரைந்தீர்கள்?” "இந்த அழகை என்றும் நிலைக்கச் செய் வதற்காக." "என்ன இருந்தாலும் இது உணர்ச்சியில்லாத திரைதானே?” 'இதற்கா உணர்ச்சியில்லை என்னுடன் அந்தக் குமரி பேசுகிருளே! அந்தச் சிரிப்பு இப்போது உன் னிடம் ஏது? அதில் இல்லாத உயிர் உணர்ச்சி வேறு எங்கே இருக்கிறது?’’ தெய்வயானைக்கு அவன் கருத்துச் சிறிதும் புலப்படவில்லை. 豪 臺 藤 மேலும் ஓர் ஆண்டு கழிந்துவிட்டது: குழந்தை ஒன்றே இன்று தெ ப்வயானைக்கு ஆறுதல் அதன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/13&oldid=825046" இலிருந்து மீள்விக்கப்பட்டது