பக்கம்:பிள்ளை வரம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடை பெருத கேள்வி இருளே ஊடுருவிப் பிளந்துகொ థౌన్గ్లో காதில் வந்து புகுந்தது. வேறு ஒரு வகைா ஒலியும் இல்லை. கிரீச்சிடும் சிறு சிறு பூச்சிகள் கூட வாயடங்கிக் கிடந்தன. அந்த நாய் மட்டும் இந்த ஆழ்ந்த அமைதியைக் குலைத்துக் கொண்டு அப்ப்டி ஊளையிடுவானேன்? அதற்கு என்ன வேதனையோ? அது தனது காவல் தொழிலில் எதைக் கண்டு இப்படி அலறுகிறதோ? ஏதாவது ஒரு மனிதனக் கண்டிருந்தால் இலக்குமே அல்லாது ஊளையிடாதே? ஒரு சமயம் குளிர் தாங்க மாட்டாமல் வருந்துகிறதோ அல்லது பசியோ என்னவோ? எனக்கு இதைக் கண்டறிய வேண்டுமென்று هدية ஆவல் உண்டாயிற்று. மேலும் உறக்கம் பிடியாமல் எத்தனை நேரந்தான் இப்படிக் கட்டிவில் புரண்டு கொண்டு இருப்பது? தடாலென்று எழுந்து போர் வையை இழுத்துப் போர்த்துக்கொண்டு அக்குரல் வந்த திசையில் நடக்கலானேன். உயிர்ப் பிராணிகளின் நடமாட்டமே காளுேம் இருளின் மேல் இருளைப் போர்த்தது போல எங்கு ஒரே மையிருள். வானத்தைக் கருமேகம் சிறு இடை வெளியும் தெரியாமல் மூடியிருந்தது. நட்சத்திரங் களின் மின்மினி ஒளிகூட இல்லை. L. షో-(

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/146&oldid=825064" இலிருந்து மீள்விக்கப்பட்டது