பக்கம்:பிள்ளை வரம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H50 பிள்இ வரம் அதோடு நாள் பார்த்த உருவம் பேயாயிருந்தால் அப்படி அசைந்து அசைத்து நடக்கவேண்டிய தில்லையே? அப்பா, அது இங்கு வந்து சேரவே ஒரு சாமமாகிவிட்டதே. எ த ற் கு ம் தைரியமாகப் பார்த்துவிடலாமா?.... . - மறுபடியும் பேச்சுக் கேட்டது. 'கண்ணே, நான்-இனி உன்னைப் பிரியவோ முடியாது. என்னேக் கட்டி அணைத்துக்கொள்.” ஒரு கணம் பேச்சில்லை. ஏன் கட்டி அணைக்கக் கூடாதென்கிருப்? பொறு பொறு என்கிருயேநான் உன்னே ஆலிங்கனம் செய்யாமல் இன்று போகவே மாட்டேன்....” "கிட்டே வந்தால் ஒடிவிடுவாயா? கண்ணே நீ இப்படிச் சொல்வது சரியா? ஒரு நிமிஷம் நிற்க மாட்டாயா? கண்னே' என்று ஆத்திரத்தோடு குரல் கேட்டது. நான் சட்டென்று எழுந்து உற்று நோக்கி னேன். . என்ன ஆச்சரியம்! நம் ஊர் நொண்டி முடவன் எதையோ கட்டிப் பிடிப்பவன்போல் தனது சிறு கைகளே நீட்டிக்கொண்டு வெட்ட வெளியை அங் காந்து பார்த்துக்கொண்டு நிற்கிருன்! அவன் மேலே போர்த்திருந்த கருங் கம்பளி கீழே ஒருபுறம் கிடக் கின்றது. நிலத்தோடு உருண்டு வந்ததுபோல் காணப் பட்ட உருவம் யாரென்று இப்பொழுது விளங்கி விட்டது. அவன் முடவன். அதோடு சப்பைக்கால் நொண்டி. அவன் நடப்பதைக் கண்டால் வெகு விநோதமாக இருக்கும். நொண்டி முடன் மனைவி இறந்துபோய் ஒரு ※ மாதமாகிவிட்டதே. பிறகு அவன் இங்கே யாருட்ன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/151&oldid=825070" இலிருந்து மீள்விக்கப்பட்டது