பக்கம்:பிள்ளை வரம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் வழி 18 AMMCAMAMAMAAAASASASS iAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSHAAASAAAA உண்டாகிவிட்டது. இந்தத் தடவை அவன் வார்த் தையை லேசாகக் கொள்ள முடியவில்லை. அவன் முகத்தில் என்றும் இல்லாத உறுதி குடிகொண்டிருத் தது. ஏனென்ருல் இப்பொழுது விஷயம் பெரிதாய் விட்டது. சரோஜாவை அவன் கல்யாணம் செய்து கொளவதை முன்னெல்லாம் பெற்ருேள் உறவினர்களுமே ஆட்சேபித்தார்கள். அவையெல் லாம் ஒருவாறு தீர்ந்துபோய் அவன் ஆவலோடு திருமணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் சரோஜாவே அவனைக்கல்யாணம் செய்துகொள்ள மறுத்து விட்டாள். திடீரென்று என்னவோ கோபம். "ஏன் திடீரென்று இப்படி மனமாறுதல் ஏற் பட்டது? நடந்த விஷயம் என்ன?’ என்று நான் அவனை மெதுவாகக் கேட்டேன். "கல்யாணத்தை அடுத்த மாதத்திலேயே வைத் துக் கொள்ளலாமென்று நான் சொன்னேன். அவள் கோடை விடுமுறையில் வைத்துக்கொள்ளலாம் என்று ஒரே பிடிவாதம் செய்தாள்.” "சரி, சரி; அதற்காக அவளிடம் சண்டைபோட் டுக் கொண்டாயாக்கும்! கோடை விடுமுறையில் வைத்துக்கொண்டால் ந ல் ல து தானே ? நீயும் பரீட்சை எழுதிவிடுவாய். பரீட்சைக்கு முன்ஞல் கல்யாணத்தை வைத்துக்கொண்டால் படிப்புக்கு இடைஞ்சல்தானே?" "அதெல்லாம் எனக்கும் தெரியும். உன்னுடைய யோசனை எனக்கு வேண்டியதில்லை' என்று அவன் உறுமினன். "அடடே கோபிந்துக் கொள்ளாதே. இரண்டு பக்கத்திலும் பெற்ருேர்களுடைய சம்மதமோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/157&oldid=825076" இலிருந்து மீள்விக்கப்பட்டது