பக்கம்:பிள்ளை வரம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 பின்னே வரம் கிடைத்துவிட்டது. பிறகு அவசரம் என்ன? இரண்டு மாசம் தாமதிக்கப்படாதா என்றுதான் நினைத் தேன்.”

  • உனக்கு என்ன தெரியும்? நீ அப்படித்தான் நினைப்பாய். காதலின் போக்கை அறியாத நீ வேறு எப்படி நினைப்பாய்?"

"காதலைப்பற்றித்தான் எனக்குத் தெரியா தென்று எத்தனையோ தடவை ஒப்புக்கொண்டிருக் கிறேனே, மறுபடியும் மறுபடியும் ஏன் என்னை இப்படி இடித்துக் காண்பிக்கிருய்?” பின் எதற்காக இரண்டு மாசம் பொறுக்கச் சொல்லுகிருப்?” "நாஞ சொல்லுகிறேன்? அவள்தானே சொல்லு கிருள்?" "அவளுக்கு உண்மையான காதல் என்மேல் இருந்தால் அப்படிச் சொல்லியிருப்பாளா? இதி விருத்து அவளுக்கு என்மேல் ஆழ்ந்த அன்பு இல்லை யென்று தெரிந்துவிட்டது. அதனல்தான் இரண்டு மாசம் பொறு என்கிருள்.” உன்மேல் அன்பில்லாமல் அப்படிச் சொல்வ தாக எனக்குப் படவில்லை. உன் பரீட்சைக்கு இடைஞ்சலாக இருக்கப்படாது என்றுதான் அவள் இரண்டு மாசம் பொறுக்கத் தயாராக இருக்கிருள். அதுவே உண்மையான காதல் என்று நான் நினைக்கிறேன்"

  • உனது நினைப்பைக் கொண்டுபோய்க் குப்பை தொட்டியில் போடு. காதலை அறியாத உனக்கு என் மனவேதனை எப்படிக் கெரியப்போகிறது?"
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/158&oldid=825077" இலிருந்து மீள்விக்கப்பட்டது