பக்கம்:பிள்ளை வரம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓவியர் மணி 15 அவன் உடல் துரும்பாகிவிட்டது; கன்னம் ஒடுங்கிக் கண் குழிந்துவிட்டது! ஆனல் ஆசைமட்டும் தணிவதாயில்லை. ஒவியத்தைப் பார்ப்பான். அது சிரிக்கும்; கள்ளுண்டவன்போல் அவன் களிப்புடன் படுக்கையில் புரளுவான். உணர்ச்சி வேகத்தால் இருமல் விடாது வரும். சில மாதங்களில் அவன் படுக்கையை விட்டு. எழுந்திருக்கவும் வலிமையற்றவனுகி விட்டான்! எலும்புந் தோலுந் தவிர அவன் உடம்பில் ஒன்றும் ல்லை. சாளரத்தின் பக்கமாகக் கால்மாட்டிை வைத்துக் கட்டிலைப் போட்டுக்கொண்டான். கைக் கெட்டும் தூரத்தில் அந்த ஒவியத்தை வைத்தான். அதையே பார்த்துக்கொண்டு படுத்திருந்தான். அவனுக்கு இருமல் அதிகமாயிற்று காய்ச்சலும் தலைவலியும் அடிக்கடி வந்தன. கால் குடைச்சலும் சில வேளைகளில் சேர்ந்துகொள்ளும். உடல் துன்பம் அவன் சக்தியை மீறத் தொடங்கிற்று. அந்தப் படம் அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே இருந்தது. ஒரு நாள் உடம்பில் ஏற்பட்ட வலியைப் பொறுக்க முடியாமல் அவன் புரண்டுகொண்டிருந் தான். விடாது இருமல் நெஞ்சைப் பிளந்தது. பிற ருடைய அன்பு மொழிகளுக்கு ஏங்கி, "அப்பார்” என்று_ பெருமூச்செறிந்து முருகன் ஒவியத்தை நோக்கினன்! அது சிரித்தது. அந்தச் சிரிப்பு இப்பொழுது அவனேப் பரவசப் படுத்தவில்லே! துன்புறுபவனுக்காக அதில் கவலை இருக்கிறதா? ஆறுதல் மொழி அந்த உதடுகளில் தொனிக்கிறதா? ஒரே சிரிப்பு! முருகன் மறுபுறம் திரும்பிப் படுத்துக்கொண் டான்! அவன் தலைகொதித்தது; மண்ண்ட் வெடித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/16&oldid=825079" இலிருந்து மீள்விக்கப்பட்டது