பக்கம்:பிள்ளை வரம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிப்பாய் மருதப்பின்

    • ہے .

“g இருக்கும் வரையிலாவது எனக்கு ஏதாவது வழி சொல்லிக்கொண்டிருந்தாய்-இப்போது அதற்கும் ஒருவரும் இல்லை. என் தலைவிதி அப்படி இருக்கிறது” என்ருன் மருதப்பன். அவன் உள்ளத்தில் குடிகொண்டிருந்த துயரம் அவன் பேச்சிலே தொனித்தது.

  • சும்மா கவலைப்படாதே. இன்னும் ஒரு மாதத் திற்கு நான் இருக்கிறேன். அதற்குள் உன்னுடைய துன்பமே தீர்ந்து போகும்படி ஒரு நல்ல தோது சொல்லுகிறேன்' என்ருன் சின்னப்பன்.

சின்னப்பன் இப்பொழுது சிப்பாய் உடையில் காட்சி அளிக்கிருன், இரண்டாவது உலக மகா யுத்தத்தில் நேசக் கட்சியில் அவன் ஒரு வீரன். அவன் சைனியத்தில் சேர்ந்து ஆறு மாதங்களாவிட்டன. ஒரு மாத ரஜாவில் அவன் இப்பொழுது சொந்த ஊருக்கு வந்திருக்கிருன். "அவளைக் கண்டாலே எனக்கென்னவோ பயமா விருக்கிறது. ஊரெல்லாம் இது தெரிந்து போய் விட்டது. எல்லாரும் என்னைப் பெண்டாட்டிக்குப் பயந்தவன் என்று கேலி பண்ணுகிரு.ர்கள்”, என்ருன் மருதப்பன். "உனக்கு நான் ஒரு நல்ல தந்திரம் சொல்விக் கொடுக்கிறேன். அதன்படி நடந்தால் நிச்சயம் உன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/164&oldid=825084" இலிருந்து மீள்விக்கப்பட்டது