பக்கம்:பிள்ளை வரம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிப்பாய் மருதப்பன் H63 தொல்லை தீர்ந்துவிடும். வீட்டில் நீ ராஜாமாதிரி இருக்கலாம்.” z "அதுதான் நான் வேணுமென்று கேட்கிறேன்; சொல்லேன், பார்க்கலாம்.' "இந்த இரண்டு நாளாய்ப் பார்த்தாயா? எத்தனை பேர் என்னை வந்து பார்க்கிரு.ர்கள்! என்னைக் கண்டாலே எல்லோரும் பயப்படுகிரு.ர்கள்;. எழுந்து நின்றுகொள்ளுகிருர்கள். இதெல்லாம் எதளுல் தெரியுமா? எல்லாம் இந்த ராணுவ உடையி ளுல்தான். முன்னெல்லாம் என்னை யாராவது ஒரு பொருளாக மதித்தார்களா? இல்லை. காக்கி உன்ட் போட்டுக்கொண்டு, காவில் பூட்ஸ் மாட்டிக் கொண்டு என்னைப்போல டக் டக் என்று நடந்தால் எல்லாரும் நடுங்கவேண்டாமா? இந்தக் காக்கி உடைக்கு இத்தனை மகிமை இருக்குமென்று எனக்கு இதுவரையில் தெரியாது. நீயும் இதைப் போட்டுக் கொண்டு காலில் பூட்ஸ் மாட்டிக்கொண்டு டக் டக் என்று நடக்க ஆரம்பித்தால் உன் பெண்டாட்டி தன்னைப்போல் அடங்கிவிடுவாள்.' "ஆமாம், அதைப் போட்டுக்கொள்வ தென்ருல் பட்டாளத்தில் சேரவேணுமே?” - "நீ ஒண்னும் சேரவேண்டாம்: பேசாமல் என் னுடன் ஒரு வாரத்திற்கு வா. இரண்டு பேரும் எங்காவது தலைமறைவாக ஒர் ஊருக்குப் போய் விடுவோம். அங்கே உனக்கு இந்த் உடையைப் போட்டுக்கொண்டு எ ப் ப டி நடக்கிறதென்று சொல்லிக் கொடுக்கிறேன். பிறகு, இங்கே வந்து நீயும் பட்டாளத்தில் சேர்ந்து கொண்டதாகச் சொல்லி அவளை மிரட்டிவிடலாம்." g . இது நல்ல தோதுதான். ஆளுன் பட்டிர் ளத்தில் சேர்ந்துவிட்டதாகச் சொல்விக்கொண்டு இங்கேயே இருந்தால் இட்டு வெளியாய்விடுமே?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/165&oldid=825085" இலிருந்து மீள்விக்கப்பட்டது