பக்கம்:பிள்ளை வரம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பிள்&ன வரம் "அதையெல்லாம் நான் பார்த்துக்கொள் கிறேன். ஜப்பான்காரன் நம்ம தேசத்துக்குள்ளே கால் வைப்பதற்குப் பயந்துகொண்டு கிடக்கிருன். அதஞலே புதுசாச் சேர்ந்த சிப்பாய்களுக்கெல்லாம். ஆறு மாசம் வீவ் என்று நான் சொல்லிவிடுகிறேன். நம்ம ஊர்க்காரர்கள் நான் இப்போ என்ன சொன் ஞலும் நம்பிவிடுவார்கள். உனக்கு அதைப்பற்றிக் கவலேயே வேண்டாம். ஆறு மாசத்துக்கு மிரட்டி அடக்கி வைத்திருந்தால் பிறகு உன் பெண்டாட்டி எப்பவும் பயந்து நடப்பாள். அப்புறம் அதிகாரம் பண்ணவே தைரியம் வராது.” மருதப்பனுக்கு வந்த குதுரகலத்திற்கு அளவே யில்லை. தனது தீராத கவலையெல்லாம் அப்பொழுதே தீர்ந்துவிட்டதாக நினைத்துத் தன் நண்பனே அப் படியே கட்டியனைத்துக்கொண்டான். "சின்னப்பா, இது ரொம்ப நல்ல யோசனை. இண்ணிக்குச் சாயங் காலமே நாம் பழநிக்குப் போவோம், வா. நம்ம காரியத்தையும் பார்த்துக்கொள்ளலாம்; சாமி தரி சனமும் செய்துகொள்ளலாம்” என்ருன் மருதப்பன். 铬 瀋 豪 சின்னப்பனுடைய யுக்தி மிக நன்ருக வேலை செய்கிறது. மருதப்பன் இப்பொழுது வீட்டில் சர்வாதிகாரம் நடத்துகிருன். அவன் காக்கி உடை அணிந்துகொண்டு கையில் ஒரு சிறு பிரம்புடனும், காலில் ஆணியடித்த பூட்ஸுடனும் டக் டிக் என்று நடப்பதைப் பார்த்து அவன் மனைவிக்குப் பயம் தட்டிவிட்டது. இதுவரை கேலி செய்துகொண் டிருந்த ஊர் மக்களெல்லாம் இப்பொழுது மரு. தப்பனை மரியாதையோடு .ெ ச ன்று பார்க்க லாஞர்கள். அவன் சண்டை தீர்ந்து வந்தவுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/166&oldid=825086" இலிருந்து மீள்விக்கப்பட்டது