பக்கம்:பிள்ளை வரம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிப்பாய் மருதப்பன் #65. அந்த ஊரிலுள்ள புறம்போக்கு நிலமெல்லாம் அவ லுக்கே கிடைக்கும்ேன்றும், அதனுல் அவன் பெரிய பண்ணைக்காரளுகி விடுவானென்றும் எல்லோரும் பேசிக்கொண்ட்ார்கள். மருதப்ப்ன் என்னமோ அப்பாவிமாதிரி இருந்தான்; உண்மையிலே அவன். பெரிய தைரியசாவி. அவனே அந்தச் சிப்பாய் உடைய கயிலே பார்ப்பதற்கே பயமாயிருக்கிறது!’ என்று அவர்கள் வெளிப்படையாக ஒருவ்ருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள். - பத்து நாட்கள் இவ்வாறு கழிந்தன. பிறகு ஒரு நான் மருதப்பன், சின்னப்பனுக்குத் தெரியாமல் சிப்பாய் உடை யணிந்துகொண்டு ஈரோட்டிற்குப் புறப்பட்டான். கரட்டுப்பாளையத்திலிருந்து பத்தி மைல் தொலைவில் உள்ள பட்டனம் ஈரோடு. அதற்கு ரயிலில் போவதுதான் சுலபம். அவன் ரயிலில் ஏறி உட்கார்ந்த பிறகு அதே பலகையில் யாரும் உட்காரத்துணியவேயில்லை. ஜோராக மருதப் பன் காலை நீட்டிப் படுத்துக்கொண்டான். அந்தச் சமயத்தில் அவனுக்குத் தன்னை ஆறு மாதங்களுக்கு முன் ரயிலில் ஏற முயன்றபோது ஒரு சிப்பாய் பிடித்து உந்தியது நினைவிற்கு வந்தது. அதை இப்பொழுது நினைத்தபோது அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. "இன்றைக்கு அப்படி என்னை யார் தள்ள முடியும்? நான் வேண்டுமானுல் யாரையும் கவ்தா கொடுக் கலாம்” என்று பெ ரு ைம ய க எண்ணிக் கொண்டான். ரயில் ஈரோடு சந்திப்பில் வந்து நின்றது. ரயில் மேடையில் எங்கும் ஒரே கூட்டம். எல்லோரும் ஒரு வருக்கு முன் ஒருவராக ரயிலில் ஏறி இடம் பிடித்துக் கொள்ள வேண்டுமென்று தயாராக இருந்தார்கள். மருதப்பன் இறங்குவதற்குள்ளாக, அவசரம் அவசர மாக ஒருவன் உள்ளே புகுந்துவிட்டான். மருதப்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/167&oldid=825087" இலிருந்து மீள்விக்கப்பட்டது