166 பிள்&ன வரம் னுக்கு மூக்குக்குமேல் கோபம் வந்துவிட்டது. அவன் முன்போல் பெண்டாட்டிக்குப் பயந்த மருதப்பணு என்ன, கோபம் வராமலிருப்பதற்கு? அவன்தான் சிப்பாய் மருதப்பளுச்சே! ஆகவே, அதிகாரத் தொனியில், டேய், நான் கீழே இறங்குவதற்குள் ஏண்டா ஏறிஞய்?’ என்று சொல்வி மருதப்பன் அவனுடன் சண்டைக்குப் போனன். அந்தப் பேர்வழி காக்கி உடிைக்குப் பயந்தவ ளுகத் தெரியவில்லை. அவன் மருதப்பனை அலட்சிய காகப் பார்த்துக்கொண்டே, ‘சர்க்கார் உன்னே ஜப்பான்காரனுடன் சண்டை போடச் சொன்னுள் களா? இல்லை, என்னுடன் சண்டை போடச் சொன்ஞர்களா?' என்று கேட்டான். அதைக் கேட்ட மருதப்பன் ஆத்திரமடைந்து, அவனைப் பிடித்து இழுத்துக் கீழே விட்டான். அந்த மனிதன் அவனை அநாயாசமாகத் தள்ளிவிட்டு, மீண்டும் ரயிலில் ஏறப்போஞன். அவனை மருதப்பன் பிடித்து இழுக்க, மருதப்பன அவன் பிடித்து இழுக்க, அதனுல் அங்கு ஒரு பெரிய அமளி ஏற்பட்டு விட்டது. போலீஸார் விரைந்து வந்தனர். அவர்கள் மருதப்பனைச் சில கேள்விகள் கேட்டதும், அவன் உண்மையில் பட்டாளத்தில் சேர்ந்தவனல்ல என் பதும், போலி வேஷதாரி என்பதும் வெளியாகி விட்டன. அதனல் குற்றம் சாட்டப்பட்டுப் பாது காப்பில் வைக்கப்பட்டான். 畿 彙 豪 மருதப்பன் ஒரு சிப்பாயினுடைய உடையை அணிந்துகொண்டு போலியாக நடித்திருக்கிருன் என்பது சந்தேகமில்லாமல் தெரிந்துவிட்டது.
பக்கம்:பிள்ளை வரம்.pdf/168
Appearance