பக்கம்:பிள்ளை வரம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரங்கு மனம் காளியம்மாளுக்குத் தாங்க முடியாத துக்கம். நினைக்க நினைக்க அவள் உள்ளம் குமுறத் தொடங் கிற்று. துக்கம் மலைபோலப் ப்ெருகிற்று. அவள் ஆசையோடு கேட்ட சேலையைத் தகப்ப்ளுர் வாங்கி வரவில்லை. அதுவும் தலைத் தீபாவளிக்கு. விசனத் திற்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? முதல் தீபாவளிக்கே இப்படியென்ருல் பின் என்ன இருக் கிறது? அவள் சென்ற ஒரு மாத காலமாக எண்ணி எண்ணி மகிழ்ந்ததெல்லாம், கண்ட கண்ட கன வெல்லாம் சிதறிப்போய் விட்டன. தன் கணவளுேடு பூரிப்புடன் பிறந்தகத்துக்குத் தீபாவளிக்காக இரண்டு நாள் முன்னதாகவே வந்ததும், வந்த மறு: நாள் மாலை தகப்பஞர் வாங்கிவந்த சேலையைப் பார்க்கும்வரையில் அவள் குதுகலமாக இருந்ததும் இப்பொழுது மறைந்துவிட்டன. ஆனல் தீபாவளி அவள் வருத்தத்தைக் கண்டு வராம்ல் நிற்கிறதா? அந்த ஊரிலும் தீபர்வளி நாள் எண்ணெய்த் தேய்ப்பு, புத்தாடை, பணியார வகை .கள் முதலிய சிறப்புகளுடன் புலர்ந்துவிட்டது. அன்று காலையில் காளியம்மாள் எண்ணெய் தேய்த்து முழுகவில்லை. தலைவலியென்று இழுத்துப் போர்த்துப் படுத்துக்கொண்டாள். மத்தியான்னம் வரையில் எழுந்திருக்கவே இல்லை. அவன் தாய் கறுப்பாயி அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக வந்து தொந்தரவு செய்ததன்பேரில் மத்தியான்னம் சிறிது சாப்பிட்டுவிட்டு மறுபடியும் படுத்துக்கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/171&oldid=825092" இலிருந்து மீள்விக்கப்பட்டது