பக்கம்:பிள்ளை வரம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#72 பின்னே வரம் எண்ணங்களோ எழுந்து மறைந்தன. ஒவ்வொரு சமயம் அவளையும் அறியாமல் ஒரு துளிக் கண்ணிர் முத்துப்போல் அவள் கண்களில் தோன்றியது. அவ ளுக்கு நேரம் போவதே தெரியவில்லை. வீட்டை விட்டுத் தோட்டத்திற்கு வந்ததும் அவளுக்கு இப் போது துன்பமாகத் தெரிந்தது. திரும்பிப் போகும்போதும் பெண்கள் அவளே அதே கேள்வியுடன் மொய்த்துக்கொள்வார்களே! வெகு நேரம் கழிந்துவிட்டது. சங்கம் புதரின் மறுபுறமாகத் தொலைவில் யாரோ இருவர் குதுகல மாகப் பேசும் குரல் கேட்டது. 'சின்னம்மா, தீபாவளிக்கு வந்தியா?” "ஆமா அக்கா, அப்பன் வந்து கூட்டிக்கிட்டு வந்தாங்கோ, அவுங்களும் வந்திருக்கிருங்கோ.' "இந்தச் சேலை நல்லாருக்குது. என்ன விலை?” "சந்தையிலே அம்மா எடுத்தாந்தா! அஞ்சு ரூபா விலை. அவுங்களுக்கு ரெண்டு ரூபாயிக்கு வேட்டி துண்டு எல்லாம் எடுத்திருக்குது.” சின்னம்மாள் பெருமையோடு பேசினள். அவள் இடையில் சிவப்பும் மஞ்சளும் தலை தடுமாறிக் கிடந்த ஒரு தட்டுச்சேலே பளிச்சென்று பிரகாசித்தது. வாய் நிறைய வெற்றிலை; கொண்டை நிறைய மருக்கொழுந்து முகத்தில் களிப்பு. சின்னம்மாள் பெரியதம்பிக் கவுண்டர் பண்ணை -யில் இருபது வள்ளம் கூலிக்கு வேலை செய்யும் ஒரு பண்ணையாளின் மகள். அவளுக்கும் காளியம்மா ளுக்குக் கல்யாணமான அதே மாதத்தில்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/174&oldid=825095" இலிருந்து மீள்விக்கப்பட்டது