பக்கம்:பிள்ளை வரம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26* பின்னே வரம் இருட்டுவதற்கு முன்பே அன்று போய்விட்டார்கள். இரவு காவலுக்கு வருபவர்கள் அதற்குள் வந்து சேர வில்லை. சாளையில் ரங்க போயனும் அவன் மனைவி யும் இருந்திருக்கிருர்கள். இவை யெல்ல்ாம் வோலீஸ் விசாரணையில் தெரிந்தன. நாச்சியப்பனையும் ரங்கபோயனையும் அல்லாமல் வேறு ஆண் யாரும் அந்தச் சமயத்தில் தோட்டத்தில் இல்லையென்று நிச்சயமாய்த் தெரி யவே, அவர்கள் இரண்டு பேர் மேலும் சந்தேகம் ஏற்பட்டது. மேலும், வேலப்பக் கவுண்டருக்குப் பகைவனென்று வெளிப்படையாக யாருமே இல்லை. இது சந்தேகத்தை அதிகப்படுத்தியது. அதனல் அவ்விருவரையும் போலீசார் கைதுசெய்துகொண்டு போஞர்கள். - - ஆளு ைபோலீசார் தங்களுக்குத் தெரிந்த எல்லா முறைகளேயும் பயன்படுத்தியும் அவர்களிட மிருந்து கொலையைப்பற்றி ஒரு தகவலும் தெரிந்து கொள்ள முடியவில்லை. நாச்சியப்பனும் ரங்கபோய னும் தங்களுக்கு அது சம்பந்தமாக ஒன்றுமே தெரியாதென்று மறுத்துவிட்டார்கள். போலீசார் அவர்களைப் பாதுகாவலில் வைத்திருந்தார்கள். நீதி மன்றத்தில் இந்தக் கொலை சம்பந்தமான விசாரணை தொடங்குவதற்கு முன்பு ஒருநாள் இந்தக் காவல் கைதிகள் இருவருக்கும் தனிமையில் சில வார்த்தைகள் பேசிக்கொள்ளச் சந்தர்ப்பம் தற். செயலாகக் கிடைத்தது. - - - - - - - - ரங்க போயன் நாச்சியப்பனைப் பார்த்து, "யார் கொலை பண்ணியிருப்பார்கள்?’ என்று ரகசியமாகக் கேட்டான். - - a. 'உனக்கு இன்னும் தெரியாதா? நான்தான்” என்ருன் நாச்சியப்பன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/26&oldid=825106" இலிருந்து மீள்விக்கப்பட்டது