பக்கம்:பிள்ளை வரம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரங்க போயன் 27. ரங்க போயன் திடுக்கிட்டுப் போனன். 'என்ன, நீயா? எதற்காகப் பண்ணினுய்?” "எதற்காகவா? பண்ணைக்காரன் என் வீட்டி லும் தன் கைவரிசையைக் காட்டப் பார்த்தான். அவனுக்கு நான் எப்படிப்பட்டவன் என்று தெரி யாமல் போச்சு!’ ரங்க போயனுக்கு அப்பொழுது நாச்சியப்பன் மேல் தனி அன்பு பிறந்தது. பின்னே நீ செய்யவே இல்லையென்று போலீசாரிடம் சாதித்தாயே?” "ஆமாம்; செய்தேனென்று சொல்லுவதா? எனக்குத் துரக்குமரத்தில் போய்த் தொங்க வேணும்னு இப்போ ஆசையில்லை.” "இத்தனை வருசமா நீயுந்தானே பண்ணைக்கார ருக்கு இந்த் விஷயத்திலெல்லாம் உடந்தையாய் இருந்தாய்?” "ஆமாம், அதுக்குத்தான் கடைசியிலே தீட்டின மரத்திலேயே பதம் பார்க்க வந்திருக்கிருன். அதெல் லாம் எங்கிட்ட நடக்குமா?” இதற்குமேலே தொடர்ந்து பேச அவர்களுக்குச் சமயம் வாய்க்கவில்லை. விசாரணை நாள் வந்தது. நாச்சியப்பன் கீழ்க் கண்டவாறு வாக்குமூலம் கொடுத்தான். "பண்ணைக்காரர் வண்டியை விட்டு றங்கி யதும் மாடு கன்றுகளைப் பார்ப்பதற்காக வழக்கம் போல் போய்விட்டார். நான் குதிரையைக்கொண்டு போய்க் கட்டி, அதற்குக் கொள்ளு வைத்தேன். அது தின்ற பிறகு கொஞ்சம் அருகம் புல் போட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/27&oldid=825107" இலிருந்து மீள்விக்கப்பட்டது