பக்கம்:பிள்ளை வரம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*30 t3sir3: argio "நீ இந்த உலகத்தில் இருந்தால் பண்ணைக் காரர் போன்ற மனிதர்கள் கொஞ்சம் அடங்கி யிருப்பார்கள். நான் இருந்து யாருக்கு லாபம்? நம்மைத்தான் இந்தக் கோர்ட்டுகள் தண்டிக்குமே ஒழிய அவர்களை ஒன்றும் செய்யாது. அதனுல் நீ இருப்பது நான் இருப்பண்தவிட நல்லது உனக்கு இருக்கிற தைரியம் எனக்கு இல்லை.” .هم "உன்னை விடவா நான் தைரியசாலி? செய்யாத குற்றத்தைச் செய்ததாக ஏற்றுக்கொண்டு சாகப் போகிற உனக்கு நான் எந்த மூலை?” "சரி சரி. அதைப்பத்தி இப்போ பேசவேண்டிய தில்லை. நீ இப்பொழுதுதான் கலியாணம் பண்ணிக் கொண்டிருக்கிருய். நீயும் உன் பெண்டாட்டியும் எவ்வளவு பிரியமாய் இருக்கிறீர்களென்று எனக்குத் தெரியும். நீங்கள் சுகமாக இருக்கவேணும்.” "நீயும் உன் வீட்டுக்க்ாரியும் அப்படிப் பிரிய மாகத்தானே இருந்தீர்கள்?’’ ரங்க போயன் மெளனம் சாதித்தான். பழைய நினைவுகள் அவன்முன்பு படக்காட்சிபோல் நின்றன: பேசக் கிடைத்த நேரம் தீர்ந்தது என ஒருவன் அறி வித்துக்கொண்டு பக்கத்தில் வந்தான். இருவரும் பிரிந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/30&oldid=825111" இலிருந்து மீள்விக்கப்பட்டது