பக்கம்:பிள்ளை வரம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 இன்னே வரம் டிருக்கும்; அதனல் அதன் இரு கருங்கிலும் பசே லென்று பசும்புல் அடர்ந்து வளரும். அங்கே எரு மையை ஒட்டிக்கொண்டு போய்மேய விட்டுவிட்டு, வீரன் ஒரு மரத்தடியில் இருப்பான்; ஆவணப் போலவே இன்னும் சில பையன்களும் அங்கே கூடு விார்கள். பனங்கொட்டை ஆட்டம், பந்து, பம்பரம் முதலிய விளையாட்டுக்களிலே அவர்களின் பொழுது போகும், - - - - - வீரனுக்கு அவன் தகப்பன் ஒரு தப்பட்ட்ை கட்டிக் கொடுத்திருந்தான். அவனுக்கு இந்த வயதி லேயே எல்லாவிதமான கொட்டு முழக்கும். தெரியும்; பெரியவளுகிறபோது அப்பனேவிட அவன் தப்பட்டை அடிப்பதில் கெட்டிக்காரகுவான் என்று சேரியில் பெருமையாய்ப் பேசிக்கொள் வார்கள். மேலே சொன்ன விளையாட்டுக்களில் சவிப்பு ஏற்பட்ட சமயத்தில், வீரன் தனது தப்பட்டையை எடுத்து முழக்குவான். மற்றச் சிறுவர்கள் ஒரு கம்பம் நட்டு அதைச் சுற்றி ஆடுவார்கள். இப்படிப் பகலெல்லாம் இன்பமாகவே கழியும். • விரன் வேலைக்குச் சேர்ந்த நாலாவது மாதத் முத்துசாமிக் கவுண்டர் ஒர் இளஞ் செம்மறிக் கடாவை வாங்கிஞர், அடுத்த ஆடியிலே காட்டுக் கறுப்பண்ண சுவாமிக்குப் பலியிடுவதற்காக, வீரன்தான் அதையும் மேய்த்து ஐந்தான். நாளாக நாளாக அவனுக்கு அந்தக் குட்டியின் மேல் அளவு கடந்த பிரியம் உண்டாகிவிட்டது. விளை யாட்டையெல்லாம் விட்டுவிட்டு, அதற்குப் புல் தேடித் கொடுப்பதிலேயே இப்போது காலத்தைப் போக்கலாகுன், அந்த வாயில்லாப் பிராணியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/32&oldid=825113" இலிருந்து மீள்விக்கப்பட்டது