பக்கம்:பிள்ளை வரம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

象 స్టో బ్రీ மூன்ரும் பதிப்பின் முகவுன் மாதம் எட்டு ரூபாய் சம்பளத்தில் மனேவி இரு குழந்தைகளோடு இன்பமாகக் கந்தப்பன் வாழ்ந் தான் என்று படிக்கும்போது, இது. எந்தக் கற்பனை உலகத்திலே என்று கேட்கத் தோன்றுகிற தல்லவா? நான் படைத்திருப்பது கற்ப&ன உலக மல்ல; முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னல் இருந்த நம் நாட்டையே நான் குறிப்பிடுகிறேன். அந்தக் காலத்திலே இருந்த கொங்கு நாட்டு மக்களே நினைவில் வைத் து இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான க ைத க ள் கற்பனை செய்யப் பட்டுள்ளன. ஆணுக்கு ஒரு நாளேக்குக் கூவி நான்கு அணு என்பதை இன்று நினைத்துப் பார்க்கவே முடியாது. இருந்தாலும் அக்காலத்து நி லே ைய யு ம் மனப்பாங்கையும் உள்ளவாறே அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கவேண்டும் என்று கருதியே இப்பதிப்பில் அவைகளில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. கதை அமைப்பிலும் நடை அமைப்பிலும் பல மாறுதல்கள் செய்துள்ளேன். கொங்கு நாட்டு உழவர்களின் தேன் கலந்த கொச்சைப் பேச்சு நடையை நான் தொடவில்.ை அது அப்படியே உள்ளது. கிராமச் சூழ்நிலையும் ஒவியக் கலையும் உளவிய லும் இக்கதைகளுக்கெல்லாம் பின்னணியாக நிற் கின்றன. உழவுத் தொழில் செய்து வாழும் சூது வாது அறியாத மக்களிடையே நான் இளமையிலே வளர்ந்தேன். கொங்கு நாட்டு ஊர்களே எனக்கு வளம் அளித்தன. காவிரித்தாய் எங்களுக்குச் சிறந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/4&oldid=825121" இலிருந்து மீள்விக்கப்பட்டது