பக்கம்:பிள்ளை வரம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னே வரம் "எந்த விட்டைப் பார்த்தாலும் இதிலே சொத்தை, அதிலே சொத்தை என்கிருயே;-நாம், என்ன விலைக்கா வாங்கப் போகிருேம்? இரண்டு நாளேக்கு இருப்பதற்கு இந்த மகாராணிக்கு ஒரு பங்களாக் கட்டிவிடலாமா?” என்று முத்துசாயிக் கவுண்டர் கோபத்தோடு முனு முனுத்துக் கொண்டே போளுர். அவருக்கு வயது சுமார் நாற் பத்தைந்து இருக்கும். மிக இளவயதிலேயே 'மைனர் தர்பார் நடத்தத் தொடங்கியதால் இப்பொழுதே அவர் கிழப் பருவத்தை அடைந்துவிட்டார். தலே அநேகமாக வெளுத்துத் தோன்றியது. முகத்தில் ஒடுக்கு விழுந்துவிட்டது. ஆண்மை குன்றி உடல் அலுத்துப்போனவர்கள் சீக்கிரம் பொறுமையை இழந்துவிடுவது இயற் கையே. முத்துசாமிக் கவுண்டரும் இத்த விதிக்கு மாறுபட்டவர் அல்ல. சிறு வயதில் இவர் யாரிடமும் கோபித்துக்கொள்வதே இல்லையாம். ஆளுல், இப் பொழுது கொஞ்சம் மனத்திற்குப் பிடிக்காவிட்டா தும் எரிந்து விழுவார். அவருடைய இரண்டாம் மனேவி லக்ஷ்மிகூடச் சில சமயங்களில் இதற்கு இலக் காகாமத் போகவில்லை. ஆளுல் முத்துசாமிக் கவுண்டிருக்கு அவளிடம் பிரேமை அதிகம். முதல் மனேவி, அவரது தர்பார் களின் பயனுகவே மகப்பேறு கூட இல்லாமல் எமன் வாய்ப்பட்டாள். இரண்டாவது கல்யாணமாகி

ে ""; கண்டு-ஆகின்றன-குழ த்தை இல்லாததால்.

. : r:: : گران { تلخينية

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/41&oldid=825123" இலிருந்து மீள்விக்கப்பட்டது