பக்கம்:பிள்ளை வரம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 இப்பொழுது இந்தத் தம்பதிகள் திருப்பதியிலே தங்குவதற்காக ஒரு வீடு தேடிக்கொண்டிருக்கின் றனர். இரண்டு மூன்று வீடுகளைப் போய்ப் பார்த் தார்கள். அவைகளெல்லாம் லக்ஷ்மிக்குப் பிடிக்க வில்லை. அதனுல்தான் கவுண்டருக்குக் கோபம் வந்துவிட்டது. திருப்பதியில் பணம் அதிகமாகக் கொடுத்தா. லும் நல்ல வீடு கிடைக்காது. பொதுவாகத் தரிசனத் திற்கு வருபவர் யாரும் நல்லவிட்டைப்பற்றி அதிகம் கவலைப்படுவதும் இல்லை. சமைப்பதற்கும், துணி மணிகளை வைத்துக்கொள்வதற்கும் ஒரு சிறு வீடோ, அல்லது சத்திரத்தில் ஒரு மூலையோ கிடைத் தால் அதுவே திருப்தி. கோயில் அர்ச்சகர்களைவிட அதிகமாக மூட்டைப்பூச்சிகளும், கொசுக்களும் உயிரை வாங்குகின்றனவேயென்று அவர்கள் கவ னிப்பதில்லை. ஒரு நாள், இரண்டு நாள், அதற்குள் என்ன கெட்டுப்போகும்? நம்ம வீடா-எல்லா வசதி களும் தேடிக்கொண்டிருக்க?' என்று இருந்துவிடு வார்கள், லக்ஷ்மிக்குச் சுகாதாரத்தைப்பற்றிக் கவலை யில்லை. இத்தனை பெரிய பணக்காரி ஒரு சாதாரண வீட்டில் தங்குவாளா? அவள் பணக்காரியென்று, அங்கு அவளுக்கும், அவள் கணவனுக்கும், கூடவந் திருக்கும் சமையல்காரனுக்கும் தவிர வேறு யாருக் கும் தெரியாது. இருந்தாலும் சிறிய வீட்டில் தங்க அவள் மனம் ஒப்பவில்லை. கடைசியாக ஒரு மெத்தை வீட்டின் கீழ்ப்பகுதியில் ஒர் அறையும், சமைக்கத் தனியறை ஒன்றும் கிடைத்தன. மெத்தை வீடாதலால் லக்ஷ்மி மகிழ்ச்சி அடைந்தாள். மாலையில் அவர்கள் ஆழ்வார் தீர்த்தத்திலும், -பாபநாசத்திலும்.சென்று முழுகிவிட்டுச் சுவாமி தரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/43&oldid=825125" இலிருந்து மீள்விக்கப்பட்டது