பக்கம்:பிள்ளை வரம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பிள் ஆன வாழ் அறிந்து விசனப்பட்டாளு?- ஆமாம், அப்படித் தான் இருக்கவேண்டும். வீட்டுக்காரியிடம் அவன் என்னைப்பற்றி விசாரித்திருப்பான், தனியாக உட்கார்ந்துகொண்டு லகடிமி தன் மனத்தைக் கற்பனையுலகில் தாராளமாக உலவ விட்டுவிட்டாள். ஆளுல் அவள் மனக்கோட்டை திடீரென்று இடிந்து விழலாயிற்று. முத்துசாமிக் கவுண்டர் உள்ளே நுழைந்தார். லகழ்மி தன்னே அறியாமலே பெருமூச்சு விடலாஞள். அன்று சாயங்காலமே ஊருக்குத் திரும்பி விடுவ தாக அவர்கள் எண்ணிக்கொண்டு வந்திருந்தார்கள். ஆனல் லக்ஷ்மிக்கு அன்றே புறப்பட விருப்பமில்லை; வீடு அவளுக்குப் பெரிதும் திருப்தி அளித்தது. வேங்கடாசலபதியை இன்னும் சில நாட்களுக்குத் தரிசனம் செய்ய ஆசைப்பட்டாள்: முத்துசாமிக் கவுண்டருக்கோ ஒரே மகிழ்ச்சி. எத்தனை நாட்க ளென்ருலும் அவருக்குச் சம்மதந்தான்; ஆதலால் மேலும் ஒரு வாரம் அங்கேயே இருப்பதென்று முடிவு செய்துவிட்டார்கள். நடேசனை அன்று முழுதும் பார்க்க இயலவில்லை. அவன் தன் அறையைவிட்டு வெளிக் கிளம்பவே இல்லை! இரவில் பாஞ்சோ ஒலியும் கேட்கவில்லை. மறுநாள் காலை லக்ஷ்மி சமையலறையில் அன்று சமைக்க வேண்டிய உணவைப்பற்றிச் சொல்லிவிட்டு வந்தாள்; அப்பொழுது வீட்டிற்குள் நடேசன் குரல் கேட்டது. அவள் மெய் சிலிர்த்தது; மெதுவாகக் கதவுப் பக்கம் போய் நின்று உற்றுக் கேட்டாள்! தடேசன் ஆத்திரத்தோடு பேசிக்கொண்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/46&oldid=825128" இலிருந்து மீள்விக்கப்பட்டது