பக்கம்:பிள்ளை வரம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்இ வரம் - 47 "என்னைப்போல் எத்தனே பேர் சமூகத்தில் தலை காட்ட நாணி மறைவாகத் திரிகிருர்களோ? என் தாயைக் கெடுத்தது மட்டுமா? எனக்கு வாழ்நாள்' முழுவதும் தீராத அவமானத்தை உண்டாக்கி விட்டாயே! எனக்குச் செல்வம் இருக்கிறது, படிப்பும் இருக்கிறது; இருந்து என்ன செய்வது? நீ உயிரோடு இருக்கிருய் என்ருலும் எனக்குத் தகப்பன் இல்லை. உன்னைப்போன்ற சண்டாளர்கள் உலகில் எத்தனை பேரோ? இவ்வளவு பெரிய பிள்ளை நான் இருக்கும் போது நீ பிள்ளை இல்லையென்று வரங் கேட்க வந்திருக்கிருயே! உனக்கும் க ட வு ள் அருள் செய்வாரா?” * ஆத்திரமும் அழுகையும் அவன் நெஞ்சை அடைத்துக்கொள்வதுபோல் இருந்தது. அவன் தடாலென்று வெளியே போய்விட்டான்; கதவருகே நின்ற லக்ஷ்மியையும் கவனிக்கவில்லை. முத்துச்சாமிக் கவுண்டர் ஒன்றும் சொல்லத் தோன்ருமல் திகைத்துப்போய் உட்கார்ந்திருந்தார். மாலை நேரம் வரையில் அவர் அநேகமாக வாய் திறக்கவே இல்லை. கடைசியில் பெருத்த தயக்கத் தோடு அவர் தம் மனைவியைப் பார்த்து, 'ஊருக்கு இன்றே போகலாமா?’ என்று கேட்டார். லக்ஷ்மி, "போகலாம்” என்ருள். அங்கிரு ந்து உடனே போய்விடுவதில் அவரைவிட அவளுக்குத் தான் இப்பொழுது ஆவல் அதிகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/48&oldid=825130" இலிருந்து மீள்விக்கப்பட்டது