பக்கம்:பிள்ளை வரம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பின் ரே வரம் உண்டு. ஆனல் இது வெளிப்படையாக யாருக்கும் தெரியாது. முருகனது கலைப் பைத்தியம் கமலத்தையும் பிடித்துக்கொண்டது. முருகளுேடு பழகியவர் யாரை யும் அது விடாது என்றே சொல்லவேண்டும். நாள்தோறும் அவள்ஓவியக்கூடத்திற்குப்போவாள்; எத்தனே மணி நேரமென்ருலும் சலிப்பில்லாமல். முருகன் நிற்கச் சொன்னவாறெல்லாம் நிற்பாள் அவளுக்கு அதில் தனி இன்பம். என்றும், யாருக்கும் இன்பங் கொடுக்கிற ஓர் அழகிய ஒவியத்தை உரு வாக்குவதில் தானும் பங்கெடுத்துக் கொள்வதைப் பற்றி அவள் பெருமை கொண்டாள். ஆனல் தனது அழகில் அவள் சிறிதேனும் கருவம் கொள்ளவில்லை. கமலம் பல நாள் இவ்வாறு முருகனுடன் இருந்து வந்தது பலவிதப்பேச்சுக்கு இடங்கொடுத்து விட்டது. சந்திரகேசரன் காதுக்கும் அது எட்டி விட்டது. வம்புப் பேச்சுக்குத்தான் இறகு முளைத் திருக்கிறதே! கமலத்தின் உள்ளம் அவனுக்குத் தெரி யாதாகையால் அவன் வதந்திக்குச் செவி சாய்க்க லாளுன். அவனுடைய ஐயத்தை நிலைநாட்ட மற்ருெரு முக்கிய காரணமும் சேர்ந்துகொண்டது. ஒவியக் காட்சி ஒன்று சென்னையில் கோகலே மண்டபத்தில் நடந்தது. பல படங்களுடன் முருகனுடைய ஓவியங், களும் அக் காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. அங்கு. வைக்கப்பட்டிருந்த எல்லாப் படங்களிலும் முருகன் வரைந்த கடைசிப் படந்தான் கலையரங்கின் கண்ணுக விளங்கியது. அதுதான் கமலத்தை மாதிரியாக வைத்து எழுதிய ஓவியம். அதைப் பார்த்து மெய் மறந்து நிற்காதவர்களே இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/59&oldid=825142" இலிருந்து மீள்விக்கப்பட்டது