பக்கம்:பிள்ளை வரம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{ -क्रुदा متمم பேசுகிருய்' என்று உறுமிக்கொண்டிே.போய் விட்டான். சந்திரசேகரன் தான்.-முன்பே-கேள்விப்பட் டிருந்த வதந்தி உண்மைதானென்று-நிச்சயமாகமுடிவு கட்டினுன். அது அவனுக்கு ப் பெரிய அதிர்ச் சியை உண்டுபண்ணிற்று; சோர்ந்த மனத்துடன். கல்யான ஏற்பாட்டை அவன் நிறுத்திவிட்டான். கமலத்தின் பெற்ருேருக்கு, கல்யாணம் வேண் டாமென்று அவன் சொன்னதன் காரணம் தெரி யாது. இப்படிப்பட்ட நல்ல வரன் கிடைக்க வில்லையே என்று அவர்களுக்கு ஏமாற்றமுண்டா குலும் கடவுளின் மேல் பாரத்தைப் போட்டு விட்டுப் பேசாமல் இருந்துவிட்டார்கள். "எங்கே முடிச்சுப் போட்டிருக்கிறதோ அங்கேதானே நடக் கும்? தம் முயற்சியால் என்ன ஆகிறது?’ என்கிற மனப்பான்மை ஒரு வகையில் நல்லதாகத் தோன்று கிறது. வீணுன துன்பம் ஏற்பட வழியில்லை அல்லவா? கமலத்திற்குத் தன்னைப்பற்றிக் கிளம்பியுள்ள பேச்சுத் தெரியாமல் இல்லை. ஜாடை மாடையாக அது அவள் காதிலும் விழுந்திருந்தது. அதனல், கல்யாணம் நிறுத்தப்பட்டதன் காரணத்தை அவள் தனது கூர்ந்த அறிவால் ஊகித்துக்கொண்டாள். இருந்தாலும் அவள் எப்படிச் சந்திரசேகரனிடம் இந்தப் பேச்சுப் பொய்யென்று நிரூபிப்பாள்? அவ. -னிடம் ஒரு நாளும் பேசாதவள் இன்று பேச முடி யுமா? அதுவும், தான் அவனை அந்தரங்கமாகக் காதலிக்கிறகாகச் சொல்வ முடியுமா? அப்படிச் சொன்னுலும் அவன் அதை நம்பாவிட்டால் என்ன செய்வது ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/61&oldid=825145" இலிருந்து மீள்விக்கப்பட்டது