பக்கம்:பிள்ளை வரம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தம்மாள் தம்பியையாவது கூட வரச் சொல் தனியாகவா போகிருய்?" வேண்டாம் அம்மா. நான் தனியாகவே போகிறேன். அவர்கள் ஏதாவது சொன்னல் தம்பிக்கு வேதனையாக இருக்கும்.” * "உனக்கு மட்டும் வேதனையாக இருக்காதா?” "நான்தான் கேட்கப் பிறந்திருக்கிறேன்; தம்பி பும் கேட்கவேணுமென்று என்ன தலைவிதியா? என் னைத் திட்டுவதைக்கேட்டால் தம்பிக்கு வருத்தமாக இருக்கும். நானே போகிறேன். அவன் வேண் டாம்.” மாராயி தன் மதன் நிலையை நினைத்துத் தாரை தாரையாகக் கண்ணிர் விடலாஞள். இதுவரையில் மெளனமாக வீற்றிருந்த அவள் கணவன் குமரப்பன், "எதற்கு அழுகிருய்? ஊருக்கு அனுப்புகிறபோது சிரித்தமுகமாக அனுப்பு. ஏதோ ஒரு நாளைக்குக் கோபத்திலே அவர் ஏதாவதுசெய்து விட்டால் தினமும் அப்படியா இருக்கும்? இனிமேல் எல்லாம் நல்லாயிருக்கும்........ முத்து, நீ மாத்திரம் பொறுமையாக நடந்துகொள். உனக்கு ஒன்றுமே கெடுதல் வராது” என்ருன். முத்தம்மாள் தன் கண்களைத் துடைத்துக் டகொண்டு, நேரமாகிறது; போய்விட்டுவருகிறேன்ட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/67&oldid=825151" இலிருந்து மீள்விக்கப்பட்டது