பக்கம்:பிள்ளை வரம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவியன் த்ன்னங் கீற்றின் மேலே அந்தச் சூரியனுடைய பொற் கிரணங்கள் பட்டு -ஜொலிப்பதைப் பார்த் ^ _ ? காற்று மெதுவாக ஒலைகளே அசைக்கும்போது, ஆக்ா, 'அந்த ஜொலிப்பின் அழகை என்னென்பது அதை எனது ஒவியத்தில் பிடித்துவிட வேண்டுமென்று மூன்று நாட்களாக முயன்றுகொண்டிருக்கிறேன். எந்த வகையான வர்ணக் கலவை செய்து வரைந்தாலும் எனக்கு மன நிறைவு ஏற்படவில்லை. கண்ணெதிரில் கண்ட அந்த மின்னல் ஒளியின் மினுமினுப்பை அப்படியே பிடிக்க முடியவில்லை. ஒன்று, மஞ்சள் நிறம் சிறிது அதிகமாகிவிடுகிறது; அல்லது பசுமை மேலெழு கிறது. இல்லாவிட்டால் இவைகளுக்குள்ளேமயங்கி கிடக்கும் செவ்வண்ணம் மிகுதியாகி ஜொலிப்பைக் கொஞ்சம் மங்கச் செய்துவிடுகிறது. இப்படி ஏதாவது ஒரு குறை ஏற்பட்டு என் கைத்திறனைச் சோதித்துக்கொண்டே இருந்தது. நான் உட்கார்ந்திருப்பது ஒரு காடு; மக்கள் நடமாட்டம் இல்லாத வனப்பு மிக்க இடம். அதனல் நிம்மதியாக எனது வேலையில் மனத்தை ஒரு முக மாகச் செலுத்த முடிந்தது. ஆளுல் தொலைவில் தோன்றும் அந்தத் தென்னங் கீற்றுகளில் நடக்கும் ஒளி நடனத்தை மட்டும் இன் னும் என்னுல் திரையில் சிறைப்பிடிக்க முடியவில்லை. இரண்டு மாலை வேளைகள் வீணுயின. மூன்ருவது நாளும் வெற்றி கிடைப்பதாகக் காணவில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/75&oldid=825160" இலிருந்து மீள்விக்கப்பட்டது