பக்கம்:பிள்ளை வரம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவியர் மணி அவன் ஒர் ஒவியன்! அவள் ஒரு கட்டழகு வாய்ந்த இளங்குமரி, அழகை அள்ளிப் பருகி வர்ணங்களில் சிறைப்பிடிக்கும் அவன் உள்ளத்தை அவள் கவர்ந்தது வியப்பன்று. இந்த உள்ளக் கவர்ச்சி தொடக்கத்தில் கலை உணர்ச்சியாகவே ம்லர்ந்தது; அவளது கட்டுக்கு அடங்காத எழிலே அவன்,எழுத ஆவல் கொண்டான். அவளும் இணங்கிளுள்: ஒரு சிறிய அறையிலே, ஒவியக் கூட்டங்களுக்கிடையே தனிமையில் இரு வரும்:பல நாட்கள் சந்திக்கலாஞர்கள். சில நாட்களில் அந்நியம்’ என்ற உணர்ச்சி நட்புணர்ச்சிக்கு இடங் கொடுத்து மறைந்து விட்டது. இப்பொழுது அவர்கள் ஒருவரை ஒருவர் பெயர் சொல்லி இயல்பாக அழைத்துக்கொள்ளு கிரு.ர்கள். 'முருகா, இன்னும் எத்தனை நாட்களுக்கு எழுதிக்கொண்டிருப்பாய்?” "எத்தனை நாளேக்குத் தீட்டினலும் உன் அழகு முழுவதையும் திரையில் காட்ட முடியாதே! தெய்வம், நீ பெயரளவில் மட்டும் தெய்வமல்ல; நீ அழகுத் தெய்வம்.” தெய்வியான சிரித்தாள்; மறுகணம் நாணிக் குனிந்தாள். முருகன் தான்ஒன்றும் மிகைப்படுத்திக் கூறியதாக நினைக்கவேயில்லை! அவள் அழகைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/8&oldid=825165" இலிருந்து மீள்விக்கப்பட்டது