பக்கம்:பிள்ளை வரம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ ក្ញុំ : பற்றிச் சொல்ல ஏற்ற சொற்கள் அகப்படவில்ேைய என்றுதான் ஏங்கிக் கொண்டிருந்தான். ஆளுல் சொல்ல இயலாததை அவன் கை திறம்படச் செய்து கொண்டிருந்தது. அதில் ஐயமே இல்லை. முருகன் தெய்வயானையின் ஒவ்வோர் உறுப் பிலும் பொங்கும் பேரெழிலைப் படத்தில் பதித்துக் கொண்டிருந்தான். அவளோ அவன் தன் . தைத் திரையில் பிடிப்பதோடு உள்ளத்தையும் கவர்ந்துகொண்டான் என்பதை மெதுவாக உணர்த் தாள், திங்கள் சில சென்றன! இப்பொழுது அவர்கள் முறைப்படி திருமணம் செய்துகொண்ட கணவனும் மனேவியும். தெய்வ யானையின் ஒவ்வோர் அசைவும் முருகனுக்கு ஒரு புது ஒவியத்திற்கு உணர்ச்சி தருவதாக இருக்கிறது: முருகன் எழுதும் ஒவ்வொரு ஓவியமும் தெய்வயானை பின் காதலே வளர்க்கும் உயிர்ச் சத்தாக உருவடை கிறது. முருகன் சிறந்த ஒவியன் என எங்கும் புகழ் பெற்ருன். ஏழு ஆண்டுகள் இன்பத்தில் மறைந்தன. தெய்வயானையின் மடியிலே ஒர் ஆண்டு நிரம் பிய பெண் குழந்தை கொஞ்சிக்கொண்டிருக்கிறது. அதன் பிறகுதான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது! ஒரு நாள் மாலே. முருகன் தன் கண்களே மூடிக்கொண்டு உள்ளத்திலேயே ஓவியமொன்றைக் கற்பனை செய்துகொண்டிருந்தான். தெய்வயானை அங்கு வந்து எதிரில் நின்றதும் அவனுக்குத் தெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/9&oldid=825176" இலிருந்து மீள்விக்கப்பட்டது