பக்கம்:பிள்ளை வரம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ பிள் ாே வரம் தொலைத்துவிட்டேனே!) நாற்பது ஐம்பது என்ருலும் எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம்; ஐந்நூறு ரூபாய்க்கு எங்கே போவது? இவ்வாறு அவர் நினைத்து நினைத்து தெம் டுயிர்த்துக்கொண்டிருந்தார். மணி ஆக ஆக அவர் கவலையும் மன வேதனையும் அதிகரித்தன: "விடி யாமல் இப்படியே இரவாகவே எனது வாழ்க்கை கழிந்துவிடாதா?-என்றுகூட எண்ணலாஞர்." துரத்தில் எங்கோ மணி பன்னிரண்டு அடிக்கும் சப்தம் கேட்டது; ஒவ்வோர் அடியும் தமது நெஞ்சில் தாக்குவது போலிருந்தது அவருக்கு. நானேப் பகல் பன்னிரண்டு மணிக்குள் எல்லாம் வெளியாகிவிடும். அப்பொழுது நான் ஒரு மோசக்காரணுகச் செட்டி யார் முன்னிலேயிலும், மற்றக் குமாஸ்தாக்கள் முன் னிலையிலும் நிற்கவேண்டும். இத்தனை நாள் என் மேல் கொண்டிருந்த அபிமானமெல்லாம் ஒரு கனத்தில் பறந்தோடிவிடும்; தாட்சண்யம் இல்லா மல் செட்டியார் என்னே வேலையினின்றும் நீக்கி விடுவார். நாணயம் தவறிய பிறகு எனக்கு வேறு எங்கேதான் வேலே கிடைக்கப் போகிறது? எந்த முகத்தை வைத்துக்கொண்டு நான் ஒருவரை வேலை கொடுங்கள் என்று கேட்பேன்? சே சே, இது என்ன வாழ்வு! நாணயந் தவறிய பிறகு இந்த வாழ்க்கை வாழ்ந்து என்ன பயன்? இனி இந்த உயிரை வைத் திருப்பதால் யாருக்கு நன்மை? என்று இவ்வா றெல்லாம் வைராக்கியமான நினேவுகள் அவர் சிந்தையில் நிறைந்துவிட்டன. இனி இந்த உயிரை வைத்திருப்பதில்லையென்று அவர் முடிவு கட்டிவிட்டார். உடனே தடாலென்று கம்.டிலே விட்டு எழுந்தார். தண்ணிர் சேந்தும் கயிறு பக்கத்தில் கிடத்தது. அதை எடுத்துக்கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தார். அவர் இருப்பதோ ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/97&oldid=825184" இலிருந்து மீள்விக்கப்பட்டது